‛சர்வாதிகாரம்’.. பாஜக மீண்டும் வென்றால்.. தேர்தல் என்பதே இருக்காது! பாட்னாவில் பகீர் கிளப்பிய மம்தா
பாட்னா: மத்தியில் மீண்டும் சர்வாதிகார பாஜக அரசு அமைந்தால் எதிர்காலத்தில் இந்தியாவில் தேர்தல் இல்லாத நிலை இருக்கும். இதனால் பாஜகவை தோற்கடிக்க வேண்டியது அவசியம் என பீகாரில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமை வகித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்பட 16 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 4 மணிநேரத்துக்கும் அதிகமாக நடந்து முடிந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனை கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடக்க இருக்கிறது. இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் தான் இன்றைய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தலைவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பாஜக மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருகிறது. பாஜகவுக்கு எதிராக பேசி வரும் எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட பிற ஏஜென்சிகள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் தான் இதனை பாஜக செய்து வருகிறது. இது நடக்க கூடாது.
நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், சாமானியர்கள், தலித்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கிறது. இதுபற்றி பாஜகவினர் கவலை கொள்வது இல்லை. மேலும் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது. அதனையும் மத்திய பாஜக அரசு என்பது கண்டுக்கொள்ளாமல் உள்ளது'' என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் டெல்லியில் ஆம்ஆத்மி அரசுக்கு எதிராகவும் மம்தா பானர்ஜி கூறினார். டெல்லியில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இது ஒரு கருப்பு சட்டமாகும். இதனை எதிர்த்து போராடுவோம்'' என்றார். இதன்மூலம் டெல்லியில் குடிமைப்பணியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு தனக்கு ஆதரவாகவும், ஆம்ஆத்மி அரசுக்கு எதிராகவும் கொண்டு வரும் சட்டத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications