வேலைக்காக... பிளிப்கார்ட்டில் தன்னையே விற்ற ஐ.ஐ.டி மாணவர்
டெல்லி: மேற்கு வங்க மாநிலம், கரக்பூரைச் சேர்ந்த ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் பிரபல விற்பனை இணையதளமான பிளிப்கார்ட்டில் வேலைக்கு சேர நூதன உத்தியைப் பயன்படுத்தி அனைவரையும் ஈர்த்துள்ளார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தில் தன்னையே விற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்தவர் ஆகாஷ் நீரஜ் மிட்டல் என்கின்ற மாணவர்.

மேலாளர் வேலைக்கு:
இவர் இணையதள விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டில் உற்பத்தி மேலாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்தார்.

ஆயிரக்கணக்கான விண்ணப்பம்:
பல்லாயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததால் சுமார் 5 வினாடிகளில் ஒரு விண்ணப்பத்தை பார்த்துவிட்டு ஒதுக்கிவிடுவார்கள் என்பதை ஆகாஷ் நீரஜ் மிட்டல் உணர்ந்தார்.

எளிதில் தேர்வாக:
இதனால் தேர்வு செய்பவர்கள் தனது விண்ணப்பத்தை முழுமையாக படிக்கும் வகையில் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தார். இதனையடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்தில் தன்னை விற்பனை செய்வது போன்ற பாணியில் தனது விண்ணப்பத்தை தயாரித்து அனுப்பியுள்ளார்.

வேடிக்கை விளையாட்டு:
விண்ணப்பத்தில் அவர், ‘‘நாட்டில் உள்ள மிகவும் மேன்மை தங்கியவர்களுடன் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருவேலையில் நிலைத்து நிற்பது என்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். சில வேடிக்கையான விஷயங்களை செய்யத் தொடங்க வேண்டும்.

வித்தியாசம் அவசியம்:
கூட்டத்தில் இருந்து வித்தியாசப்பட்டு இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய விண்ணப்பம்" இவ்வாறு தெரிவித்து இருந்தார். ஆனால் வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் ஆகாஷ் நீரஜ் மிட்டலுக்கு பிளிப்கார்ட் நிறுவனத்திடம் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications