கூகுள் ப்ளஸ்ஸை உருவாக்கிய மெட்ராஸ் ஐஐடிகாரர் கூகுளில் இருந்து ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கூகுள் ப்ளஸ்ஸை உருவாக்கிய விக் குண்டோத்ரா கூகுள் நிறுவனத்தை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

மெட்ராஸ் ஐஐடியில் படித்த விக் குண்டோத்ரா கடந்த 2007ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். அவர் சமூக வலைதளமான கூகுள் ப்ளஸை உருவாக்கியவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் ப்ளஸ் ஃபேஸ்புக்குடன் ஒப்பிடுகையில் அந்த அளவுக்கு பிரபலம் இல்லை.

IITian who built Google+ announces resignation

இந்நிலையில் விக் கூகுள் ப்ளஸ்ஸில் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது,

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து நான் கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அது குறித்து பேச இது உகந்த நாள் இல்லை. இது கடந்த 8 ஆண்டுகளை கொண்டாடும் நாள் என்று தெரிவித்துள்ளார்.

கூகுளில் சேர்வதற்கு முன்பு விக் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

விக் விலகுவது குறித்து கூகுள் நிறுவன சிஇஓ லாரி பேஜ் கூறுகையில்,

விக் கூகுள் ப்ளஸ்ஸை உருவாக்கியவர். அவ்வாறு செய்வதற்கு சிலருக்கு மட்டுமே துணிவும், திறமையும் இருக்கும். விக்கின் கடின உழைப்பை நான் மதிக்கிறேன். கூகுளை அடுத்து அவர் பணிபுரியும் இடத்தில் அவருக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+