மேற்கு வங்கத்தில் கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் பலி!
மேற்குவங்க மாநிலத்தில் கள்ளச் சாரயம் குடித்து 6 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பர்த்வான்: மேற்குவங்க மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ளது ராமகோபால்பூர் கிராமம். இங்கு சட்டத்திற்கு விரோதமாக கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை இப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை ஏராளமான கூலித் தொழிலாளர்கள் வாங்கி அருந்தியுள்ளனர். அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடியவர்களை மிட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 6 பேர் நேற்றிரவு சிசிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications