டிசம்பர் 4 முதல் 6 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை மையம் அலெர்ட்!
டிசம்பர் 4ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video

டெல்லி : டிசம்பர் 4ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஓகி புயல் அரபிக் கடல் வழியாக லட்சத்தீவு அருகே சென்றுவிட்டது. ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் கனமழையுடன், புயல் காற்றும் வீசியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அந்த மாவட்டம் முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று முதவ்ர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதே போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டமும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. பேய்க்காற்று ஓய்ந்த நிலையில் அங்கு இன்னும் மழை நீடிக்கிறது.

இன்று மழை பெய்யுமா?
இதனிடையே இந்திய வானிலை மையம் மழை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இன்று அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளக் கடல் பகுதியில் காற்று
லட்சத்தீவு பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கேரளா, கர்நாடக கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மீனவர்கள் தவிர்க்க வேண்டிய பகுதிகள்
கேரளா, கர்நாடகா கடல் பகுதி மற்றும் லட்சத்தீவு அந்தமான தீவுகள் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மட்டுமே கனமழை இருக்கும் என்றும் நாளை தமிழகத்திற்கு மழை பாதிப்பு இல்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

3 நாட்களுக்கு தொடர் மழை
இதனையடுத்து டிசம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்த நிலையில் இதன் எதிரொலியாகவே டிசம்பர் 4 முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை இருக்கும் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications