மோடி, கவாஸ்கர், கபில் எல்லோரும் வாங்க.. இம்ரான் அழைப்பு.. நான் வர்றேன்.. சித்து குதூகலிப்பு!
Recommended Video

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில் தேவ், கவாஸ்கர் உள்பட பல இந்திய பிரமுகர்களுக்கு பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவுள்ள இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். இதில் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அழைப்பை ஏற்றுள்ளார்.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அவர் ஆட்சியமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் தனது பதவியேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார் இம்ரான் கான். அதில் இந்தியத் தலைவர்களை பெருமளவில் கலந்து கொள்ள வைக்கவும் அவர் ஆர்வம் காட்டுகிறார். இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆகஸ்ட் 11ம் தேதி இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழா நடைபெறவுள்ளது. இம்ரான் கான் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசி மூலம் இம்ரான் கானைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவாஸ்கர், கபில் தேவ், சித்து, நடிகர் அமீர்கான் உள்பட இந்திய பிரபலங்கள் பலருக்கும் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் சித்து உடனடியாக அழைப்பை ஏற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகப் பெரிய கெளரவம். இதை உடனடியாக ஏற்கிறேன். மிகச் சிறந்த குணாதிவாதி இம்ரான்கான். மிகுந்த நம்பிக்கைக்குரியவர். அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார் சித்து.
முன்பு 2014 பொதுத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று பதவியேற்றபோது இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று ஷெரீப்பும் வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல இப்போது மோடி செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications