‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. ஆதாரத்தோடு சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. பீகாரில் ருசிகரம்
பீகாரில் ஆதார் அட்டை வைத்திருக்கும் நாய்க்கு சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: பீகாரில் நாய் ஒன்றுக்கு ஆதார் அட்டை நகலை வைத்து சாதிச்சான்றிதழ் கேட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டைப் பொறுத்தவரை மத்திய மற்றும் மாநில அரசின் பல சலுகைகளைப் பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது ஆதார் அட்டை. எனவே, ஆதார் அட்டையை அனைவரையும் பெற வைக்கும் முயற்சிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. பல ஆவணங்களில் இணைக்கப்படும் முக்கிய ஆதாரமாகவும் ஆதார் அட்டை உள்ளது.
அப்படிப்பட்ட ஆதார் அட்டையை நாய் ஒன்றுக்கு வாங்கியதோடு, அதனை வைத்து சாதிச் சான்றிதழுக்கும் விண்ணப்பித்து பீகாரில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஒரு நபர்.

அதிகாரிகள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பீகாரில் உள்ள குராரு மண்டல அலுவலகத்திற்கு சாதி சான்றிதழ் கோரி ஒரு விண்ணப்பம் வந்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தைப் பார்த்து, பணியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்த சாதிச்சான்றிதழ் விண்ணப்பம், நாய் ஒன்றின் பெயரில் கேட்கப்பட்டிருந்தது.

டாமியின் ஆதார் அட்டை
யாரோ குறும்புத்தனமாக இப்படி நாய்க்கு சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என நினைத்த அதிகாரிகள், நாய்க்கு அடையாளச் சான்றாக ஆதார் அட்டையையும் சேர்த்து அனுப்பி இருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆதார் அட்டையில் சம்பந்தப்பட்ட நாயின் பெயர் டாமி என்றும், அதன் பிறந்த தேதி 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசில் புகார்
கூடவே, அந்த நாய் ஆண் என்றும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில் ஒரு சாதாரண மனிதன் அடையாளம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில், இது ஒரு சாதாரண நாயின் அடையாளம் என்றும் அச்சிடப்பட்டிருந்துள்ளது. இந்த விண்ணப்பத்தை நிராகரித்ததோடு, இது தொடர்பாக போலீசில் புகாரும் அளித்துள்ளார் குராகு மண்டல அதிகாரி சஞ்சீவ் குமார்.

கண்டனம்
இந்தப் புகாரின் அடிப்படையில், நாய்க்கு ஆதார் கார்டு வாங்கியதோடு, தற்போது அதற்கு சாதிச் சான்றிதழ் கேட்டும் விண்ணப்பித்துள்ள அந்த விஷமக்கார நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். தற்போது டாமியின் ஆதார் அட்டையோடு, இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தனி மனித ஆதாரங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ஆதார் அட்டையில் இது போன்று குளறுபடிகளை ஏற்படுத்துவது சரியல்ல என இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மாறிய புகைப்படங்கள்
நாய்க்கு ஆதார் அட்டை வாங்கியது இது முதன்முறையல்ல. ஏற்கனவே, 2015ம் ஆண்டு மத்தியபிரதேசத்தில் உர்மி பகுதியில் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்றிற்கு அதன் உரிமையாளர் ஆதார் அட்டை வாங்கியது சர்ச்சையில் சிக்கியது. அதேபோல், மனிதர்களின் புகைப்படங்களுக்குப் பதில் தவறுதலாக மரம், சேர் என பொருட்களின் படங்கள் இடம் பெற்றிருந்த ஆதார் அட்டைகளும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications