மியான்மரில் புகுந்து அடிச்சோம்ல.. அதுதான் மோடி அரசின் வலிமை.... அமித்ஷா 'அசால்ட்' பேச்சு
பெகுசராய்: மியான்மரில் நுழைந்து தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவமே மோடி அரசின் வலிமைக்கு எடுத்துக்காட்டு என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் உட்கட்சி மோதல்களை சமாளிப்பதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா ஒரு மாத காலம் முகாமிட திட்டமிட்டுள்ளார். இன்று பெகுசராயில் 10 மாவட்ட பா.ஜ.க. தொண்டர்களிடையே அமித்ஷா பேசியதாவது:

ராகுல் பாபா (ராகுல் காந்தி) மட்டுமல்ல எவர் ஒருவராலும் எங்களுடைய அரசை அசைத்துவிட முடியாது. மியான்மருக்குள் உள்ளே நுழைந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய வலிமையான அரசு நரேந்திர மோடி அரசு என்பதை மறந்துவிடாதீர்..
காங்கிரஸ் கட்சிக்கு இந்த நாட்டை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது தெரியாது. ஆனால் பா.ஜ.க.வின் பிரதான இலக்கே நாட்டின் பாதுகாப்புதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் இடஒதுக்கீடு விஷயத்தில் மக்களை திசை திருப்புகிறார்கள். பா.ஜ.க. இடஒதுக்கீட்டை எப்போதும் ஆதரிக்கிறது. இதில் எந்த கொள்கை மாற்றமும் இல்லை.
தேர்தலில் நம் கட்சியினரும் பலரும் போட்டியிட விரும்பலாம். அனைவருக்கும் வாய்ப்பளித்துவிட முடியாது.
இந்த கட்சி நிலைத்திருந்தால்தான் உங்களுக்கு பல வாய்ப்புகள் எதிர்காலத்தில் தேடி வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால் இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்,.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
மணிப்பூரில் கடந்த ஜூலை மாதம் தனிநாடு கோரும் தீவிரவாத குழுக்கள் இந்திய ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவத்தினர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து இந்திய வரலாற்றில் முதல் முறையாக நமது ராணுவம் அதிரடியாக மியான்மருக்குள் உள்ளே நுழைந்து தீவிரவாதிகளை வேட்டையாடி. இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
தற்போது இந்த சம்பவத்தை முன்வைத்து அமித்ஷா பேசியிருப்பதையும் எதிர்க்கட்சிகள் விவாதப் பொருளாக்க வாய்ப்பிருக்கிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications