சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக் கூடுகள்... அதிர்ச்சியில் மக்கள்!
சிறையில் உள்ள ராம் ரஹீம் ஆசிரம வளாகத்தில் 600 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
சண்டிகர்: சாமியார் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா சவுதா மடத்தில் 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தேரா சச்சா சவுதா அமைப்பின் சீனியர் துணை தலைவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
சாமியார் ராம் ரஹிம் சிங், பாலியல் வழக்கில் 20 வருட தண்டனை பெற்று சிறையில் உள்ளார். அவரது தேரா சச்சா சவுதா ஆசிரம் சிர்சா என்னுமிடத்தில் 600 எக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
அங்கு அண்மையில் போலீசாரும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

600 எலும்புக்கூடுகள்
இந்நிலையில், சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரம வளாகத்தில் 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கபப்ட்டுள்ளன. அதற்கு தேரா சச்சா அமைப்பின் மூத்த துணை தலைவர் பிஆர் நைன் பதில் அளித்துள்ளார்.

புதைத்தது யார்?
அதில் சீடர்கள் இறந்துபோகும் போது அவரது உடல்களை தேரா சச்சா சவுதா வளாகத்தில் புதைத்தால் முக்தி கிடைக்கும் என்பதால் அங்கு அவர்களது பெற்றோர்களே புதைத்தார்கள் என கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை உயர் அதிகாரி குல்தீப் பெனிவால் கூறும்போது புதைக்கப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளனர் என கூறினார்.

உடல்கள் புதைப்பு
தேரா சச்சாவில் தேடுதல் வேட்டையை நடத்துவதற்கு ஒருநாள் முன்பு பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றம், ஏகேஎஸ் பவார் என்பவரை அங்கு கமிஷனர் அந்தஸ்தில் மேற்பார்வையிட நியமித்தது. தேரா சச்சா அமைப்பின் பொறுப்பாளர் சச் கஹூன், ஆசிரம வளாகத்தில் உடல்களை புதைத்ததை ஒத்துக்கொண்டார்.

மரம் நட்ட சாமியார்
இதுகுறித்து மறுப்பு வெளியிட்ட தேரா சச்சா ஆசிரம செய்தித்தாள், சாமியார் ராம் ரஹீம் சுற்றுசூழல் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக நீர்நிலைகளில் உடல்களை விடாமல், இங்கு புதைக்க அறிவுறுத்தினார் என விளக்கம் அளித்தது. மேலும் உடல்கள் புதைக்கப்பட்ட பின்பு அதன் மேல் மரங்கள் நடப்பட்டன எனவும் அந்த செய்தித்தாளில் கூறப்பட்டு இருந்தது.

கொலைக்கு சாட்சி
ஆனால், ராம் ரஹீமின் முன்னாள் ஓட்டுநர் கட்டா ராம் ரஹீம் செய்த இரு கொலைக்கு தான் சாட்சி என்றும் மேலும் ஒரு சிறுவனைக் சுட்டுக் கொன்று அதை எரித்ததை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார். ராம் ரஹீம் ஆசிரமத்துக்குள் 600 எலும்புக்கூடுகள் இருந்தன என்பது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications