வலுவான ஆதாரம்: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் விரைவில் சிதம்பரத்திடம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா ரூ. 305 கோடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கோர அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியமோ ரூ. 5 கோடிக்கு மட்டுமே அனுமதி அளித்தது. அதன் பிறகு ஐ.என்.எக்ஸ். மீடியாவின் பீட்டர் முகர்ஜியும் அவர் மனைவி இந்திராணியும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் நிறுவனத்தின் உதவியோடு ஒப்புதல் பெற்றனர்.

In INX Media next up for questioning is P Chidambaram

அதற்காக கார்த்திக்கு ரூ. 10 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் கார்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரத்திடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் என்றால் என கேட்டதற்கு அடுத்த 15 நாட்களில் விசாரணை நடத்தப்படும் என்று அவர் பதில் அளித்துள்ளார். கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்தியின் சிபிஐ காவலை மூன்று நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேசியதாக இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலம் தான் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. தனது மகனின் வியாபாரத்திற்கு உதவி செய்யுமாறு சிதம்பரம் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக இந்திராணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+