ஒரேயொரு கல்யாண போட்டோ... இணையத்தில் வைரல்.. போலீசை நாடிய இளம் தம்பதி.. இது கேரள சோகம்
Recommended Video

கண்ணூர்:கேரளாவில் பெற்றோர் ஏற்பாடு செய்து... நடைபெற்ற உண்மையான திருமணத்தை கொச்சைப் படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது தலைமுறை... தலைமுறையாக கூறப்படும் நம்பிக்கை. அது உண்மையோ.. பொய்யோ... இந்த அவசர யுகத்தில் பல வழிகளில் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. அந்த திருமணங்கள் வெற்றி பெறுவதும்... தோல்வி பெறுவதும் என்பது அவரவரின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை பொறுத்தது.
ஆனால்... கேரளாவில் ஒரு திருமணத்தை வைத்தே.. இணைய உலகில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேலி, கிண்டல்கள் அதிகரிக்க.. ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை நாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

கேரள திருமணம்
விவரம் இதுதான்:பிப்ரவரி 4ம் தேதி... கேரளாவின் செம்பன்தோட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜூபி ஜோசப் என்ற பெண்ணுக்கும், செருபுழா பகுதியைச் சேர்ந்த 29 வயதான அனூப் ஜெபஸ்டின் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இது முழுக்க.. முழுக்க பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணமாகும்.

கல்யாண போட்டோக்கள்
அனூப் சண்டிகரில் பணிபுரிகிறார். ஜூபியோ சார்ஜாவில் பணிபுரிகிறார். திருமணம் முடிந்த நிலையில்... அவர்களை பற்றி இணையத்தில் வெளியான திருமண புகைப்படங்கள், செய்திகள் தான் தற்போதைய சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி.

இது டௌரி கல்யாணம்
அவர்களின் திருமண புகைப்படமானது கேரளாவில் உள்ள தினசிரி நாளிதழில் வெளியானது. அதன் பின்னர் இணையத்திலும்...வாட்ஸ்அப்பிலும் வெளியான செய்தி இதுதான்... பெண்ணுக்கு வயது 48.. மணமகனுக்கோ 25.. இருவருக்கும் திருமணம்... வரதட்சணையாக 101 சவரன் நகை, 50 லட்சம் ரொக்கம் இந்த திருமணத்துக்கு கொடுக்கப்பட்டதாக வைரலானது.

நெட்டின்கள் கிண்டல்
அதில் என்ன இருக்கிறது...சாதாரண செய்திதானே என்று நினைப்பவர்கள்... அடுத்து வரக்கூடியவற்றை படிக்கவும்... மணப்பெண்ணான ஜூபி கொஞ்சம் குண்டாக கறுப்பாக காணப்பட... இளைஞன் தோற்றத்தில் அனூப் இருக்க... இதுவே நெட்டிசன்களுக்கு வகையாக போய்விட்டது.

நொந்து போன மணமக்கள்
வயதான பெண்ணுக்கும், வாலிபருக்கும் கல்யாணம்... இருவரின் கல்யாண ஜோடி புகைப்படத்தை வெளியிட்டு தான்... பணத்துக்காக தான் இந்த திருமணம் நடந்தது போன்று செய்தியை பரப்பவிட... ட்ரோலானது. அதுவே... ஜூபிக்கும், அனூப்பும் பிரச்சனையாக வந்தது. இது தொடர்பான வாட்ஸ் அப் புகைப்படங்கள் அவர்களின் நண்பர்கள், சொந்த பந்தங்களின் செல் போன்களிலும் ரவுண்டிக்க நொந்துபோயினர் இருவரும்.

யார் அவர்?
இருவரும் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யாரோ தான் இந்த கைங்கர்யத்தை செய்திருப்பார்கள் என்று உறுதியாக நம்பி.. தற்போது இருவரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications