உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: இளம்பெண் சீரழிக்கப்பட்டு, ஆசிட் குடிக்க வைத்து, கழுத்தை நெரித்து கொலை

Subscribe to Oneindia Tamil

பரேலி: உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பரேலி தொகுதியில் உள்ள பகேரியில் 22 வயது பெண் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் அய்த்புரா கிராமத்தில் உள்ள வயலில் கிடந்தது கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு ஆசிட் வீச்சால் சிதைந்திருந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பெண் உத்தரகண்டை சேர்ந்தவர் என்று சந்தேகித்தனர். இதையடுத்து தனிப்படை உத்தரகண்ட் விரைந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பெண்ணின் வயிற்றில் ஆசிட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தான் அவருக்கு வலுக்கட்டாயமாக ஆசிட் கொடுத்தது தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+