மோடி போட்டியிடும் வாரணாசியில் 77 பேர் வேட்புமனு தாக்கல்- மெஷினா? வாக்கு சீட்டா?
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 77 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு வாபஸுக்கு பின்னரும் 64 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் இருந்தால் வாக்குப் பதிவு எந்திரத்துக்குப் பதில் வாக்கு சீட்டுதான் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்கின்றனர் தேர்தல் அதிகாரிகள்.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி அம்மாநிலத்தின் வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். வதோதராவில் மோடியை எதிர்த்து 7 பேர் களத்தில் இருக்கின்றனர்.

வாரணாசி தொகுதியில் நேற்று மோடி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அங்கு நேற்றுடன் வேட்புமனுத் தாக்கலும் முடிவடைந்தது. மொத்தம் 78 பேர் அங்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒருவர் மோடிக்கு ஆதரவாக வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். தற்போது 77 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 28-ந் தேதி கடைசிநாள்.
தற்போதைய நிலவரப்படி சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் என 38 அரசியல் கட்சி வேட்பாளர்களும் 39 சுயேட்சை வேட்பாளர்களும் என 77 பேர் களத்தில் உள்ளனர்.
ஒரு லோக்சபா தொகுதியில் அதிகபட்சம் 64 வேட்பாளர்கள் இருந்தால்தான் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்தலாம். அதற்கு மேல் போனால் பழைய வாக்குச் சீட்டு முறைதான்.
தற்போதைய நிலையில் வாரணாசி தொகுதியில் வாக்குச் சீட்டு முறைக்கே வாய்ப்பு அதிகம். அப்படி வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடத்தினால் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகவும் தாமதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 28-ந் தேதிக்குப் பின்னர்தான் வாரணாசியில் வாக்குப் பதிவு எந்திரமா? வாக்குப் பதிவு சீட்டா என்பதும் தெரியவரும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications