நெருங்கிய தேர்தல்.. ஜார்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை.. யார் இந்த சுனில்?
ராஞ்சி: ஜார்கண்ட்டில் நவம்பர் 13, நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி உதவியாளர் சுனில் ஸ்ரீவத்சவா வீடு, அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கி உள்ளனர்.
ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். தற்போது அங்கு சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 13ம் தேதி முதற்கட்டமாகவும், நவம்பர் 20ம் தேதி 2வது கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மீண்டும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் பாஜகவும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது.
இங்கு மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 41 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் ஜார்கண்ட்டில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி உதவியாளர் சுனில் ஸ்ரீவத்சவா என்பவருக்கு சொந்தமான ராஞ்சியில் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை தொடங்கி நடந்து வருகிறது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் உள்பட மொத்தம் 7 இடங்களில் இந்த சோதனை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு வருமான வரித்துறையினர் அவரது வீட்டுக்குள் நுழைந்து சோதனையை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து சோதனை என்பது நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.இருப்பினும் அதுபற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. அதேபோல் எதற்காக அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி உள்ளனர் என்பது பற்றியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இருப்பினும் தேர்தல் தேதி நெருங்குவதால் பழிவாங்கும் நோக்கத்திலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பிரசாரம் உள்ளிட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு தான் வருமான வரித்துறையை ஏவிவிட்டுள்ளதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications