தெறிக்கவிடும் ‛இந்தியா’ கூட்டணி.. ஜார்கண்ட்டில் குவியும் தலைகள்.. ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து பேரணி
ராஞ்சி: அமலாக்கத்துறையால் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் இன்று ராஞ்சியில் பிரமாண்ட பேரணியை நடத்துகின்றனர். இதில் அரவிந்த் ஜெக்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் பாஜகவும், இந்தியா கூட்டணியும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. முன்னதாக அமலாக்கத்துறையால் ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனும், டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டனர். இதில் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், கெஜ்ரிவால் இன்னும் முதலமைச்சராகவே தொடர்கிறார்.

இப்படி இருக்கையில், இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று ராஞ்சியில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் பங்கேற்கின்றனர். இது தவிர, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஆர்ஜேடியின் லாலு பிரசாத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பரூக் அப்துல்லா, சமாஜவாதியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்கின்றனர்.
ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் தங்கள் பலத்தை காட்ட இருப்பதாக இந்தியா கூட்டணி தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தில் 5 லட்சம் பேர் வரை திரள்வார்கள் என்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் பேரணிக்கு 'உல்குலன் நீதி பேரணி' என பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த பேரணி குறித்து பேசிய ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், "ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இந்த பேரணியை நாங்கள் நடத்துகிறோம். சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்த பேரணி இருக்கிறது. அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் நாம் காப்பாற்ற வேண்டும். டெல்லியிலும், ஜார்க்கண்ட்டிலும் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பேரணிக்கு மொத்தம் 28 கட்சிகளின் ஆதரவு இருக்கிறது.
தென்னிந்தியாவிலும் எங்கள் பேரணிக்கு ஆதரவு இருக்கிறது. அங்கு லோக்சபா தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்த பேரணியில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் இல்லாதது ஆகியவையும் இந்த பேரணியை நடத்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications