சுற்றுலாவை மேம்படுத்த 78 லைட்ஹவுஸ்கள் கட்டப்படும்: அமைச்சர் கட்காரி
டெல்லி: சுற்றுலாத்துறையின் அடையாளமாக 78 கலங்கரை விளக்கங்கள் கட்டப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெல்லியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
உலகம் முழுவதும் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தியாவில் சுற்றுலாத் துறை மேலும் வளர அதிக வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் 189 கலங்கரை விளக்கங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 78 கலங்கரை விளக்கங்கள் விரைவில் கட்டப்படும்.

குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, லச்சத்தீவு, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடலோரப் பகுதிகளில் கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சங்க் ராக், கன்ஹோஜி தீவு, உத்தர் பாயிண்ட், கோர்லாய் போர்ட், ஜெய்கத், ரத்னகிரி, தேவ்கத், வெங்குர்லா ராக்ஸ், தோல்கேஸ்வர் பாயிண்ட் ஆகிய 9 இடங்களில் கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
கோவாவில் போர்ட் அகுவாடா மற்றும் சாவ் ஜார்ஜ் ஆகிய இடங்களில் கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்படுகிறது. கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்படுவதால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.
தென் கொரியா, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்காவில் கலங்கரை விளக்க சுற்றுலா நன்றாக நடந்து வருகிறது. இந்தியாவிலும் அது விரைவில் சூடு பிடிக்கும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications