ஏமனில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்
டெல்லி: ஏமன் தலைநகர் சனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் சிக்கித் தவித்த 4 ஆயிரத்து 700 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் தவிர 41 நாடுகளைச் சேர்ந்த 1000 பேரையும் மத்திய அரசு மீட்டது. இந்த மீட்பு பணிக்கு ஆபரேஷன் ராஹத் என்று பெயரிடப்பட்டது. ஆபரேஷன் ராஹத்தை அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாராட்டியுள்ளன. மீட்பு பணி முடிந்த பிறகு கடந்த 9ம் தேதி ஏமன் தலைநகர் சனாவில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது.
ஏமனில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதனைத் தொடர்ந்து சனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர்கள் செவ்வாய்க்கிழமை நாட்டை விட்டு பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கூறுகையில்,
ஏமனில் இருந்த இந்திய தூதரக ஊழியர்களை இன்று பத்திரமாக வெளியேற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications