தோல்வி அடைந்த "மிட்-நைட்" ஊடுருவல்.. லடாக் அல்ல.. இனி எங்கேயும் நுழைய முடியாது.. இந்தியா புது பிளான்

லடாக்கில் சீனாவின் ஊடுருவல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், தற்போது இந்தியா தனது எல்லை முழுக்க படைகளை குவிக்க தொடங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் சீனாவின் ஊடுருவல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், தற்போது இந்தியா தனது எல்லை முழுக்க படைகளை குவிக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    Chushul- ல் China- வுக்கு எதிராக India போட்ட திட்டம்

    இந்தியாவும் சீனாவும் சரியாக 3,488 கிமீ தூரத்திற்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. லடாக், அருணாசலப்பிரதேசம், சிக்கிம் என்று பல்வேறு மாநிலங்கள் லடாக் உடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

    இதில் கிட்டத்தட்ட அனைத்து எல்லை பகுதிகளும் இந்தியாவுடன் சீனா மோதலை கடைப்பிடித்து வருகிறது. அதிலும் லடாக் , அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளை சீனா உரிமை கோரி வருகிறது.

    சீனா உரிமை கோருகிறது

    சீனா உரிமை கோருகிறது

    இந்த நிலையில்தான் ஒரு மாத அமைதிக்கு பிறகு லடாக்கில் மீண்டும் ஊடுருவ சீனா முயற்சி செய்தது. கடந்த 29 மற்றும் 30ம் தேதி லடாக்கில் இரவு நேர ஊடுருவலை மேற்கொள்ள சீனா முயன்றது. ஆனால் சீனாவின் இந்த மிட்நைட் ஊடுருவலை இந்தியா தடுத்து நிறுத்தியது. சீனாவின் படைகள் இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் முன்பாக இந்திய படைகள் லடாக்கில் களமிறங்கியது.

    தோல்வி அடைந்த சீனா

    தோல்வி அடைந்த சீனா

    லடாக் உள்ளே படைகள் நுழையும் முன்பே இந்திய படைகள் அங்கே சென்று சீனாவின் வீரர்களை தடுத்து நிறுத்தியது. ''சீனாவின் வீரர்களை எதிர்பார்த்து நாங்கள் காத்து இருந்தோம்'' என்று இந்திய பாதுகாப்பு படை கூறியுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியா தனது எல்லை முழுக்க படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. அருணாசலப்பிரதேச எல்லையில் இந்தியா படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. லடாக்கை தொடர்ந்து அருணாசலப்பிரதேசத்திலும் இந்தியா படைகளை குவித்து வருகிறது.

    எங்கே எல்லாம்

    எங்கே எல்லாம்

    சீனாவுடன் எல்லையை பகிரும் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. எல்ஏசி முழுக்க இந்தியா தனது படைகளை குவித்து உள்ளது. டெப்சாங் தொடங்கி சிக்கிம் வழியாக அருணாசலப்பிரதேசம் வரை 3400 கிமீ தூரத்திற்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளது.இதனால் இந்தியா தற்போது வெறும் ரோந்து பணிகள் என்ற நிலையில் இருந்து புதிய நிலைக்கு சென்றுள்ளது.

    பாதுகாப்பு முக்கியம்

    பாதுகாப்பு முக்கியம்

    அதாவது ரோந்து பணிகள் என்ற நிலையை தாண்டி தற்போது '' secure border mode '' எனப்படும் எல்லையை பாதுகாக்கும், புதிய இடங்களை பிடிக்கும் நிலைப்பாட்டிற்கு இந்திய ராணுவம் சென்றுள்ளது. இந்த புதிய நிலைப்பாடு மூலம் சீனா எங்கே எல்லாம் ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது என்பதை முன்பே கணித்து அங்கு இந்திய படைகள் குவிக்கப்படும்.

    முன்பே செய்யும்

    முன்பே செய்யும்

    சீனாவிற்கு முன்னதாக இனி எல்லையில் இந்தியா இடங்களை பிடிக்கும். இதற்காக மவுன்டெயின் போர்ஸ் தொடங்கி பல்வேறு சிறப்பு படை பிரிவுகளை இந்தியா எல்லையில் களமிறக்கி உள்ளது. கிட்டத்தட்ட போர் பயிற்சி போல இந்த பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக எல்லையில் லடாக் தொடங்கி எங்கும் இனி சீனா ஊடுருவ முடியாது என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+