பாகிஸ்தானின் 16 மீடியா யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் அதிரடி தடை- சோயப் அக்தர் சேனலும் அம்போ!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானின் Dawn, Samma TV, Ary News உட்பட 16 ஊடகங்களின் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூ டியூப் சேனலும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் தடை செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு7 காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவிகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல்கள், மத உணர்வைத் தூண்டும் வகையில், தவறான, பொய்யான தகவல்களை பரப்புவதால் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களான DAWN, SAMMA TV, ARY NEWS, GEO NEWS உள்ளிட்டவைகளின் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல், விளையாட்டு உள்ளிட்டவை தொடர்பானவை இந்த டிவி சேனல்கள்.

சோயப் அக்தர் சேனலுக்கும் தடை
இதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் சேனல் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. அவரது யூடியூப் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேசப் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்திய அரசு விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோயப் அக்தரின் யூ டியூப் சேனலும் பல லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications