உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் 40 சதவீதத்தை வீணடிக்கும் இந்தியா... ஷாக் தகவல்
கொல்கத்தா: வருடா வருடம் இந்தியா உணவு உற்பத்தியில் 40 சதவீத இழப்பை சந்தித்து வருவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
உணவு தானியங்களை முறையாக பராமரிக்காதது, குளிர்சாதன வசதியை சரிவர செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த பேரிழப்பை இந்தியா சந்தித்து வருவதாக டிம் பாக்ஸ் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜீனியர்கள் அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

களத்திலிருந்து சந்தைக்கு வருவதற்குள் உணவுப் பொருட்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திப்பதும் கூட முக்கிய காரணமாக இருப்பதாகவும் பாக்ஸ் கூறுகிறார்.
இதன் காரணமாக உற்பத்தியாகும் பொருட்களில் 40 சதவீதம் வீணாகிப் போவதாகவும் அவர் கூறுகிறார். இது ஒரு மிகப் பெரிய சோகம் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப் பொருட்கள் அனைத்தும் அழுகக் கூடிய உணவுப் பொருட்களாகும். இவற்றுக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும், முறையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளிர்சாதன வசதியும் சரிவர இருக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தியாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் கைக்கு அது போகும் வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியம். ஆனால் அது இந்தியாவில் சற்று மோசமாகவே உள்ளது.
குறிப்பாக பசி, பட்டினியால் பலர் வாடி வரும் நிலையில் 40 சதவீத உணவுப் பொருட்கள் யாருக்கும் பலன் இல்லாமல் வீணாவது, அழிவது மிகப் பெரிய கொடுமையாகும். இதன் காரணமாக ஆண்டுதோறும் இந்தியாவில் 7.5 பில்லியன் டாலர் அளவுக்கு பொருள் இழப்பும் ஏற்படுகிறது.
இந்த நிலை மாறாவிட்டால் பொருளாதார நிலை மேம்பட வாய்ப்பு இல்லாமல் போய் விடும் என்றார் அவர்.
இந்தியாவைப் பொறுத்தவரை 60.6 லட்சம் டன் அளவிலான குளிர்சாதன வசதி தேவைப்படுகிறது. ஆனால் அதில் பாதி வசதிதான் தற்போது உள்ளது என்றார் அவர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications