சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் எண்ணெய் அகழாய்வுப் பணியில் இந்தியா?
டெல்லி: தென் சீனக் கடலில் எண்ணெய் அகழாய்வுப் பணிகளில் இந்தியா ஈடுபடுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் 3 நாள் வியட்நாம் பயணம் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதீன், தென்சீனக் கடலில் வியட்நாம் கடற்பரப்பில் 5 தொகுதிகள் இருக்கின்றன.
இதில் எண்ணெய் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வியட்நாம் அழைப்பு விடுத்தது. சுஷ்மா ஸ்வராஜின் இந்த பயணம் மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படும் என்றார்.
ஏற்கெனவே தென்சீனக் கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக வியட்நாமுடன் இந்தியா உறவை வலுப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications