ஸ்வீட் எடு கொண்டாடு.. வாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!
அட்டாரி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாகா எல்லையில் இந்திய பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பகிரிந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று இந்த திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பல நாடுகளில் பிறை தெரிந்ததை முன்னிட்டு நேற்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
Attari-Wagah Border: Border Security Force personnel exchange sweets with their Pakistani counterparts on the occasion of #EidUlFitr today. pic.twitter.com/QxvpLzxK2D
— ANI (@ANI) June 5, 2019
ஈகைத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி இனிப்புகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அட்டாரி - வாகா எல்லையில் இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆண்டுதோறும், சுதந்திர தினம் மற்றும் ரம்ஜான் திருநாளில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications