Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக பணக்காரர்கள் லிஸ்டில் இந்திய பெண்.. சரி நம்ம நாடு எத்தனையாவது இடத்துல இருக்குனு தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவை சேர்ந்த ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா புதியதாக இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட நபரை விடுங்க. ஒட்டு மொத்த இந்தியாவும் உலக பணக்கார நாடுகளின் வரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?

தனிநபர் GDP அடிப்படையில், உலக பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியா 124வது இடத்தில் உள்ளது. அதாவது நீங்களும் நானும் இன்னும் சாமானிய மக்களாகவே இருக்கிறோம்.

GDP india economy

வறுமை கோடு:

ஒரு நாளைக்கு ரூ.181க்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் வருமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் என்று உலக வங்கியின் முந்தைய கணக்கு சொல்கிறது. அப்படியெனில் இந்தியாவில் சுமார் 12.9 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம். நம்முடன் இருக்கும் 10 பேரில் ஒருவர் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார் என்பதுதான் இதன் அர்த்தம். ஆனால் NITI ஆயோக் மற்றும் SBI ஆராய்ச்சி இந்த எண்ணிக்கையை 6-7 கோடி என்று சொல்கிறது.

இந்தியாவின் அளவீடு என்ன?:

உலக வங்கி தனது வறுமை கோடு அளவீட்டை சமீபத்தில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஒரு நாளைக்கு 306 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பதாக கூறுகிறது. இந்த அளவீட்டை வைத்து பார்த்தால் இந்தியாவில் 37.3 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்?" என வீர வசனமெல்லாம் பேசனோமே! அப்போ நம்ம நாட்டில் இருந்த செல்வங்கள் எல்லாம் எங்கதான் போச்சு? என்று உங்களுக்கு கேள்வி எழலாம். இதற்கான புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளது.

இந்திய பணக்காரர்கள்:

1. கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பம்
செல்வம்: ₹11,61,800 கோடி (2023 உடன் ஒப்பிடுகையில் செல்வம் 95% உயர்ந்துள்ளது)

2. முகேஷ் அம்பானி மற்றும் குடும்பம்
செல்வம்: ₹10,14,700 கோடி (25% உயர்வு)

3. சிவ் நாடார் மற்றும் குடும்பம் . இதில் ரோஷ்னி நாடார் வருவார்.
செல்வம்: ₹3,14,000 கோடி

4. சைரஸ் பூனாவல்லா மற்றும் குடும்பம்
செல்வம்: ₹2,89,000 கோடி

5. கோபிசந்த் ஹிந்துஜா மற்றும் குடும்பம்
செல்வம்: ₹1,92,000 கோடி

6. ராதாகிஷன் தமானி மற்றும் குடும்பம்
செல்வம்: ₹1,89,000 கோடி

7. திலீப் சங்வி
செல்வம்: ₹1,85,000 கோடி

8. அசிம் பிரேம்ஜி
செல்வம்: ₹1,80,000 கோடி

9. குமார் மங்கலம் பிர்லா
செல்வம்: ₹1,70,000 கோடி

10. லக்ஷ்மி மிட்டல் மற்றும் குடும்பம்
செல்வம்: ₹1,60,000 கோடி

செல்வம் குவிப்பு:

இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 140 கோடி. சிறுவர்கள், குழந்தைகளை கழித்துவிட்டால் வயது வந்தவர்கள் சுமார் 92 கோடி. இதில் பில்லியனர்கள் மட்டும் 271 பேர். இவர்களில் ஒவ்வொருக்கும் குறைந்தபட்சம் ₹83 லட்சம் கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. மில்லியனர்களை பொறுத்வரை சுமார் 8.5 லட்சம் பேர் (Credit Suisse 2023) இருக்கிறார்கள். இவர்களில் ஒவ்வொருக்கும் ₹8.4 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. நாட்டின் செல்வம் எங்கு குவிந்திருக்கிறது என்று புரிகிறதா?

நடுத்தர மக்களை எடுத்துக்கொண்டால், இவர்களின் தனி நபர் சொத்து மதிப்பு ₹8.4 லட்சமாகும். மொத்தம் 68 கோடி பேர் இந்த கேட்டகிரியில் இருக்கிறார்கள். புதியதாக வளர்ந்த வந்த நடுத்தர மக்களின் எண்ணிக்கை 23 கோடி. இவர்களை புது பணக்காரர்கள் என்றும் சொல்லாம். இவர்களின் தனிநபர் சொத்து மதிப்பு ரூ.84 லட்சம்.

சாமானிய மக்களின் நிலை:

இது எதிலுமே இல்லாத நபர்கள்தான் நாம் எல்லோம். ஆக இந்தியாவில் இருக்கும் செல்வங்கள் குறிப்பிட்ட சிலரின் கைகளில் மட்டும் குவிந்து கிடக்கிறது. அது பங்கிடப்பட்டால் மட்டுமே எல்லோருக்கும் எல்லாமும் சாத்தியமாகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்தவர் வருவதை விட பெருமை, இந்தியா முதல் இடத்திற்கு வருதுதான்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே! இதில் நீங்கள் எந்த வரிசையில் வருவீர்கள்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+