ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை: ஆஸ்திரேலிய உதவியை கேட்கும் இந்தியா
டெல்லி: இந்திய இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் கவர்ந்து இழுப்பதை தடுக்க ஆஸ்திரேலியாவின் உதவியை இந்தியா நாடியுள்ளது.
ஆஸ்திரேல அட்டார்னி ஜெனரல் ஜார்ஜ் பிராண்டிஸ் இந்தியா வருகை தந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான இந்தியாவின் செயல்பாட்டிற்கு, ஆஸ்திரேலியாவின் ஆதரவை ராஜ்நாத்சிங் கோரினார்.

இந்தியாவால் தேடப்பட்டு வந்த நிழலுலக தாதா, சோட்டா ராஜனை ஆஸ்திரேலிய உளவுத்துறை உதவியோடு, இந்தோனேஷியாவில் இன்டர்போல் போலீசார் கைது செய்த நிலையில், இந்த ஆதரவு கோரல் முக்கியத்துவம் பெறுகிறது.
மும்பையை சேர்ந்த ஆரீப் இசாஜ் என்ற இளைஞன், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்றுவிட்டு, நிலைமையை உணர்ந்து இந்தியா திரும்பியபோது கைது செய்யப்பட்டார். அவர் மேலும் பல இளைஞர்களை தீவிரவாதிகளாக முயன்று, சமூக வலைத்தளங்களை அதற்காக பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. அந்த சமூக வலைத்தளங்களின் சர்வர் ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய உதவியை இந்தியா கேட்டுள்ளது. அதேபோல, இந்தியாவில் அரிதினும், அரிதான வழக்குகளில் மட்டும் தூக்கு தண்டனை வழங்கப்படுவது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்து ஆஸ்திரேலிய அட்டார்னி ஜெனரல் கேட்டறிந்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications