For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரான் சாப்.. நீங்க போட்டது "பவுன்சர்" இல்லை.. ப்யூஸ் போன பல்பு.. நஷ்டம் உங்களுக்குத்தான்!

தீவிரவாதத்தை நிறுத்தினால்தான் பாகிஸ்தானை நம்ப வேண்டும்,

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் மீண்டும் பாகிஸ்தானிடம் நம்பி ஏமாறும் இந்தியா

    சென்னை: ஒரே மண்ணில் ஒரு காலத்தில் உறவாடி கிடந்தோம். ஆனால் சில சந்தர்ப்பவாதிகளால் துண்டாடப்பட்டு இரு தேசங்களாக இன்ற பிரிந்து கிடக்கிறது இந்தியாவும், பாகிஸ்தானும்!

    அப்போது பிடித்த மோதல் இன்னும் நீள்கிறது... எத்தனையோ போர்... எத்தனையோ பலி... எத்தனையோ இழப்பு... எத்தனையோ பேச்சுவார்த்தை... எல்லாமே தோல்வி, தோல்வி, தோல்வியே!!

    வாஜ்பாய்-பஸ் போக்குவரத்து

    வாஜ்பாய்-பஸ் போக்குவரத்து

    அந்த பேச்சுவார்த்தைகளையும் இந்திய தரப்பில்தான் அதிகமுறை ஆரம்பிக்கப்பட்டது. காரணம் இனியும் எந்த உயிர்பலியும் நீடிக்க கூடாது என்றுதான். அந்த முயற்சியை தற்போதுகூட இந்தியா எடுத்தது. இணக்கத்துக்கு பாகிஸ்தான் எப்போதுமே விரும்பியதில்லை. பெனாசிர் நவாஸ் ஷெரிப் முஷாரப் என யாருமே எதற்குமே உடன்படவில்லை. லாகூருக்கு வாஜ்பாய் பஸ் விட்டதுதான் மிச்சம். அதற்கு பதிலாக நிறைய தாக்குதல்களை இந்தியா மீது தொடுத்து மனித உயிர்களை காணிக்கையாக எடுத்து கொண்டது பாகிஸ்தான்.

    அசிங்கப்படுத்திய இம்ரான்

    அசிங்கப்படுத்திய இம்ரான்

    ஒருகட்டத்தில் நேரிடையாகவே மோடி அந்த நாட்டுக்கு சென்று நவாஸ் ஷெரீப்பை பார்த்தும் பலனில்லை. ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் பாகிஸ்தானில் ஏற்படவே, இம்ரான்கானாவது இணக்கத்திற்கு உடன்படுவார் என்று மோடி எண்ணினார். இதற்காக விடாப்பிடியாக மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைக்கு விதை போட்டார். ஆனால் மற்ற பாக். அதிபர்களை விட இம்ரான்கான் பெரிய பல்பு கொடுத்துவிட்டு அசிங்கமே படுத்திவிட்டார். கிட்டத்தட்ட நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் பணியை மிக சிறப்பாக கையாண்டார் இம்ரான்கான்தான்.

    சுறுசுறுப்பான வெளியுறவுதுறை

    சுறுசுறுப்பான வெளியுறவுதுறை

    "அமைதி நடவடிக்கையில் இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்து வைக்கும் என்று இம்ரான் சொன்னதும், இந்திய அரசாங்கம் சுறுசுறுப்பானது... அடுத்தக்கட்ட பணிகளில் இறங்கியது... பல வருட முயற்சிக்கு பலன் கிடைக்க போகிறது என கனவு கண்டது... அதனால் வெளியுறவுத்துறை பரபரப்பும் சுறுசுறுப்பும் ஆனது.

    கெத்து காட்டிய இம்ரான்

    கெத்து காட்டிய இம்ரான்

    ஆனால் காஷ்மீரில் காவல்துறை அதிகாரிகள் 3 பேரைக் கொன்று தன் நிலைப்பாட்டை மறைமுகமாக அறிவிக்க செய்தார் இம்ரான்கான். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பும் விடுத்து கூடவே இந்தியாவுடன் நட்பு கரம் நீட்டுவதால் பாகிஸ்தானை பலவீனமாக கருத வேண்டாம் என்றும் கெத்தும் காட்டினார். ஆனால் மீண்டும் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்து தோல்வி முகத்தை ஏற்றது இந்தியா.

    திமிர்த்தனமான இந்தியா

    திமிர்த்தனமான இந்தியா

    மற்ற பாக். அதிபர்களாவது பேச்சுவார்த்தைக்கு மறுப்பு, அல்லது உடன்பாடு இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்தனர். கூடவே பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டனர். ஆனால் இம்ரான்கானோ, முதுகிலே குத்திவிட்டார். இவ்வளவையும் செய்த இம்ரான்கான், தனது டுவிட்டர் பக்கத்தில் "இந்தியாவின் திமிர்த்தனமான மற்றும் எதிர்மறையான பதில் எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. எது எப்படியோ என் வாழ்நாள் முழுவதும் தொலைநோக்குப் பார்வையற்ற, குறுமதியாளர்கள் உயர்ந்த பொறுப்புகளை வகிப்பதை பார்த்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    எதிர்க்கட்சிகள் சாடல்

    எதிர்க்கட்சிகள் சாடல்

    தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு செயலை கூட இம்ரான் செய்யவில்லை என வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஆனால் இம்ரான்கான் இப்படி துரோகம் செய்ததற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அவரை ரொம்பவே வறுத்தெடுத்து இருக்கிறார்கள்., "இம்ரான்கானின் தேவையற்ற ஆர்வக் கோளாறு இது, இதன்மூலம் அவரது பலவீனம் வெளிப்பட்டுள்ளது" என்று சாடியிருக்கிறார்கள்.

    ராணுவ வீரர்களின் குடும்பம்

    ராணுவ வீரர்களின் குடும்பம்

    ஆனாலும் எப்போது இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என தெரியவில்லை. ஆனால் ராணுவ வீரர்களின் குடும்பங்களும், எல்லையில் வாழ்பவர்களின் குடும்பங்களும் நாள்தோறும் நிர்க்கதியாக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவை அழித்தே தீருவது என்பவர்களுடன் பேச்சுவார்த்தை இனி சரிபடுமா என தெரியவில்லை.

    பொருளாதார பலம் வேண்டும்

    பொருளாதார பலம் வேண்டும்

    அப்படி பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று இந்தியா நினைத்தால், தனது எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தி, தன்னை முதலில் நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அது சரியான நடவடிக்கை என்று நம்பலாம். இல்லையென்றால் பொருளாதார ரீதியாக பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, வெறுமனே பேச்சுவார்த்தை என்பதை கையில் எடுப்பது ஓட்டை வாளியில் தண்ணீர் இறைப்பது போலதான்.

    English summary
    India should never believe Pakistan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X