ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணையும் இந்தியர்கள்- உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போராட இந்தியாவில் இருந்து 18 பேர் சென்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை திரும்ப அழைத்துவர முயற்சிகள் எடுக்குமாறு அரசை உளவத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலமாக நடைபெறும் முளைச்சலவையால் கவரப்பட்டு பல இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறிவருவதாகவும் அந்த உளவுத்துறை எச்சரிக்கிறது.

ஈராக், சிரியா பயணம்
ஈராக்கிலும், சிரியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு செயல்பட்டுவருகிறது. அரசு படைகளுக்கு எதிராக தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள அந்த அமைப்பில் இந்தியாவை சேர்ந்த சில அனுதாபிகளும் இணைந்துள்ளதாகவும், அடுத்த தாக்குதலை இந்தியாவில் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

18 பேர் உறுதி
இப்போது அதை உறுதி செய்யும்விதமாக, இந்தியாவில் இருந்து சென்ற 18 பேர் ஈராக்கிலும், சிரியாவிலும் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

மூளைச் சலவை
இந்த பதினெட்டு பேரும், தீவிரவாத அமைப்புகளில் இருந்தவர்கள் கிடையாது என்ற போதிலும், ஈராக் விஷயமாக மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆயுத போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்கள் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் பங்கு
சமூக வலைத்தளங்கள், யூடூப் போன்றவற்றின் மூலமாக பல இளைஞர்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேருவதற்கான உத்வேகம் ஊட்டப்படுவதாகவும், அதன்விளைவாக தேசம் கடந்து பலரும் ஈராக், சிரியாவுக்கு செல்வதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த 18 பேரை மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இனியும் இதுபோல தீவிரவாத அமைப்புகளில் இந்தியர்கள் சேர அனுமதிக்க கூடாது என்று அரசுக்கு உளவுத்துறை அறிக்கையளித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளிலும் அதே நிலை
இதனிடையே ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் இருந்தும், சுமார் 2000 பேர் ஈராக், சிரியாவுக்கு பயணப்பட்டு சண்டை போட்டுவருவதாக மேற்கத்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. புனிதப்போர் என்று கூறி, ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்து ஜிகாதிகள் ஆள்பிடிப்பதாக அந்த ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications