மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. ரஹானே அசத்தல் சதத்தால் இந்தியா ரன் குவிப்பு
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். மழை குறுக்கிட்ட நிலையில் ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது
போர்ட்ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரன் வேட்டையாடியது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஆட்டம், மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை போர்ட்ஆப் ஸ்பெயினில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. மழையால் ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். மழை குறுக்கிட்ட நிலையில் ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. குறிப்பிட்ட ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களை குவித்தது.
தொடக்க வீரர்கள் ரஹானே 103, தவான் 63, கேப்டன் கோஹ்லி 87, ஹர்திக் பாண்ட்யா 4, யுவராஜ்சிங் 14 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். டோணி மற்றும், கேதர் ஜாதவ் தலா 13 ரன்களுடன் களத்தில் நின்றனர். இதையடுத்து மே.இ.தீவுகளுக்கு 311 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ரஹானே 104 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உதவியுடன் இந்த ரன்களை குவித்தார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications