புல்லட் ரயில் வேகத்தைப் போல பொருளாதார வளர்ச்சியும் அவசியம்... மோடி வலியுறுத்தல்
டெல்லி: புல்லட் ரயில் வேகத்தைப் போல நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வருகை தந்துள்ளார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து இருநாட்டு தொழிலதிபர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவுக்கு புல்லட் ரயில் தேவையானதுதான்.. அதே நேரத்தில் அதே வேகத்திலான பொருளாதார வளர்ச்சியுமே அவசியம்.
இந்தியாவின் வளர்ச்சியில் ஜப்பானின் பங்கு பிரதானமாக இருக்கிறது. மேக் இன் இந்தியா அடிப்படையில் இந்தியாவில் இருந்து மாருதி சூசுகியின் கார்களை ஜப்பான் இறக்குமதி செய்ய உள்ளது.
ஜப்பானுக்கு நான் சென்ற போது 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக ஜப்பான் உறுதியளித்தது. தற்போது குறுகிய காலத்துக்குள் மிகப் பெரிய முன்னேற்றம் இதில் கிடைத்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதில் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மோடியின் பொருளாதார கொள்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கிறது. புல்லட் ரயில் போன்ற வேகத்தில் பிரதமர் மோடி தனது கொள்கைகளை நிறைவேற்றி வருகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications