அந்த நபரா? வேண்டாம் என எச்சரித்த இந்தியா.. சொல்லசொல்ல கேட்காத ஷேக் ஹசீனா! இப்போ எல்லாமே போச்சு
டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இவரது பதவி விலகலுக்கு வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாக்கர் உஸ் ஜமானை ராணுவ தளபதி பதவிக்கு ஷேக் ஹசீனா நியமனம் செய்தபோது இந்தியா அவரை எச்சரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் நேற்று பெரிய அளவில் வன்முறையாக மாறியது. இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டுக்கு வந்துவிட்டார்.

தற்போது வங்கதேசம் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் கட்டுப்பாட்டில் உள்ளது. விரைவில் இடைக்கால அரசு என்பது அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தது?, நாட்டை விட்டு வெளியேறியது? தொடர்பான அடுத்தடுத்த பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது நேற்றைய தினம் வங்கதேச தலைநகர் டாக்காவில் மாணவர்கள் போராட்டம் விஸ்வரூம் எடுத்தது. இதையடுத்து ஷேக் ஹசீனாவின் பிரதமர் இல்லத்தை நோக்கி மாணவர்கள் செல்லதிட்டமிட்டனர். இதையடுத்து தான் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த நாட்டின் விமானப்படை விமானத்தில் நம் நாட்டுக்கு தப்பித்து வந்தார். ஆனால் ஷேக் ஹசீனா தப்பித்ததை அறியாத போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகையில் நுழைந்து சூறையாடினர்.
இந்த வேளையில் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறிய தகவலை முதல் முதலாக வெளிப்படுத்தியது யார் என்றால் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான். இவர் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, ‛‛ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அனைவரும் அமைதி காக்க வேண்டும். நான் முழு பொறுப்பை ஏற்று பிரச்சனையை தீர்வு காண்கிறேன்'' என்று கூறினார்.
இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா பின்னணியில் வாக்கர் உஸ் ஜமான் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு தப்பித்து செல்லும்படி ஷேக் ஹசீனாவிடம் வற்புறுத்தியதாகவும், அதன்படி ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் ஷேக் ஹசீனாவின் தற்போதைய நிலைக்கு அந்த நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே தான் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது ராணுவ தளபதியாக உள்ள வாக்கர் உஸ் ஜமான் என்பவர் கடந்த ஜூன் மாதம் தான் அந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டார். இந்த வேளையில் இந்தியா சார்பில் ஷேக் ஹசீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது வாக்கர் உஸ் ஜமானை நியமனம் செய்தால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி இந்தியா சார்பில் ஷேக் ஹசீனாவிடம் விளக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாட்டில் பிரச்சனை ஏற்படலாம் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷேக் ஹசீனா கேட்கவில்லை. வாக்கர் உஸ் ஜமானை தனக்கு நன்கு தெரியும் எனக்கூறி ஷேக் ஹசீனா ராணுவத்தின் தலைமை பொறுப்பை தூக்கி கொடுத்தார்.
58 வயதான ஜமான் கடந்த ஜூன் 23ம் தேதி தான் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் என்பது 3 ஆண்டுகளாகும். இந்நிலையில் தான் ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்று ஒரே மாதத்தில் அவர் இப்போது ஆட்சியை அமைக்கிறார். இவர் ஷேக் ஹசீனாவுடன் நெருக்கமாக பணி செய்தவர். ராணுவ நடவடிக்கைகள், உளவுத்துறை நடவடிக்கை, ராணுவ பட்ஜெட் என பல விஷயங்களைக் கவனித்து வந்தார்.
குறிப்பாக பிரதமர் அலுவலகத்தின் கீழ் ஆயுதப் படைப் பிரிவிலும் தலைமை அதிகாரியாகவும் செயல்பட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பணியாற்றி வரும் வாக்கர் உஸ் ஜமான் ஷேக் ஹசீனாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இதனால் தான் ஷேக் ஹசீனா அவரை ராணுவ தளபதியாக நியமித்தார். இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் எச்சரிக்கையை மீறிய ஷேக் ஹசீனா தற்போது வாக்கர் உஸ் ஜமானிடம் தனது பதவியை பறிகொடுத்து தந்தை ஷேக் உருவாக்கிய வங்கதேசத்தில் இருந்தே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது பெரிய சோகமாகும்.
50 ஆண்டு பந்தம்னா சும்மாவா? அப்பா முதல் மகள் ஷேக் ஹசீனா வரை இந்தியா அரவணைப்பது ஏன்? ஹிஸ்டரி இதுதான்
அதுமட்டுமின்றி கலிதா ஜியாவின் அரசியல் என்பது ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமிய சத்ரஷிபீர் உள்ளிட்ட இஸ்லாமிய குழுக்களை சார்ந்தே இருக்கும். இவர்கள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள். இதனால் வரும் நாட்களில் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமிய சத்ரஷிபீர் ஆகியே குழுக்களின் செயல்பாடு என்பது வங்கதேசத்தில் எழுச்சி பெறும். இது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இதுபோன்ற செயல்களால் தான் இந்தியா முன்கூட்டியே ஷேக் ஹசீனாவை எச்சரித்தது. ஆனால் ஷேக் ஹசீனா கோட்டைவிட்டு இப்போது மொத்த நாட்டையும் விட்டுவிட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications