கதறும் பாகிஸ்தான்..30,000 வீரர்களை ‛சர் க்ரிக்'கில் குவிக்கும் இந்தியா! இந்த இடம் ஏன் முக்கியம்?
டெல்லி: பாகிஸ்தான் தொடர்ந்து நம்மை சீண்டி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பந்தாடினாலும் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை. இந்நிலையில் தான் வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நம் நாடு பாகிஸ்தான் எல்லையில் முப்படைகளின் 30,000 வீரர்களை களமிறக்கி ‛திரிசூல்' பயிற்சி மேற்கொள்ள உள்ளது. இந்த பயிற்சி என்பது ‛சர் க்ரீக்' பகுதியில் நடைபெற உள்ளது. இது பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் ‛சர் க்ரீக்' பகுதியை இந்தியா தேர்வு செய்தது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலமாக பாகிஸ்தானை நம் நாடு வெளுத்து வாங்கியது. நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள் அழித்தன. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து நம்மை சீண்டி வருகிறது.

இந்நிலையில் தான் அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ‛திரிசூல்' பயிற்சியில் ஈடுபடப்போவதாக நம் நாடு திடீரென்று அறிவித்துள்ளது. அதன்படி ஒரே நேரத்தில் ராணுவம், விமானப்படை, கடற்படை என்று முப்படையும் சேர்ந்து போர் பயிற்சி, ஒத்திகை செய்யும் நிகழ்வாகும்.
இந்த பயிற்சி என்பது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ‛ சர் க்ரீக்' பகுதியையொட்டி நடைபெற உள்ளது. ‛சர் க்ரீக்' என்பது ஒரு சதுப்பு நிலப்பகுதி. இது நம் நாட்டின் குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கு இடையே அமைந்துள்ளது. இந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாக உள்ளது. இருநாடுகள் இடையே எல்லை பிரச்சனைக்கு இந்த இடம் காரணமாக உள்ளது. இதனால் நம் நாடு அங்கு ‛திரிசூல்' பயிற்சியை தொடங்க உள்ளது.
மேலும் பயிற்சி நடைபெறும் நாளில் குறிப்பிட்ட இடத்தின் வழியாக விமானங்கள் பறக்க வேண்டாம் என்பதற்கான நோட்டம் (Notam or Notice To Airmen) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 12 நாட்களில் நம் நாட்டின் முப்படையை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் வீரர்கள்,விமானங்கள், போர்க்கப்பல்கள், ஆயுதங்களை பயன்படுத்தி போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது. பதிலுக்கு பாகிஸ்தானும் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் போர் பயிற்சி மேற்கொள்வதாக கூறி ‛நோட்டம்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ‛திரிசூல்' போர் பயிற்சிக்கு ‛சர் க்ரீக்' பகுதியை இந்தியா தேர்வு செய்தன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதற்கு பாகிஸ்தான் தான் காரணம்.
ஏனென்றால் ‛சர் க்ரீக்' பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தனது கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. ‛சர் க்ரீக்' பகுதியையொட்டி பாகிஸ்தான் தனது ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. புதிய காம்பளக்ஸ், மினி கண்டோன்மென்ட் மற்றும் அவசர காலத்தில் போர் விமானங்களை தரையிறக்கும் வசதி என்று தொடர்ந்து இந்த இடத்தை பாகிஸ்தான் மேம்படுத்தி வருகிறது. இதனை சேட்டிலைட் போட்டோக்கள் உறுதி செய்துள்ளன.
இது இந்தியாவையொட்டி உள்ளதால் பாகிஸ்தானின் இத்தகைய செயல் நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இது மத்திய அரசை கோபப்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் நமக்கு அவ்வப்போத மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால் ‛சர் க்ரீக்' பகுதியில் பாகிஸ்தான் தனது பாதுகாப்பு துறை சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவது நம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இதனால் தான் ‛சர் க்ரீக்' பகுதியில் நம் நாடு ‛திரிசூல்' பயிற்சியை அறிவித்துள்ளது. முன்னதாக நம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். தசரா நாளில் குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் ராஜ்நாத் சிங் வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். இதுதொடர்பாக அவர், ‛‛ இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்கள் எந்த இடத்தில் பதுங்கி இருந்தாலும் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள். இதனை ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக நிரூபித்து காட்டினோம்.
இந்தியாவை அச்சுறுத்தினால் வேடிக்கை பார்க்கமாட்டோம். யாராக இருந்தாலும் பதிலடி கொடுப்போம். நம்மால் பாகிஸ்தானுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்த முடியும். இதற்கு உதாரணம் தான் ‛ஆபரேஷன் சிந்தூர்'. மேலும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டின் இலக்கு என்பது பயங்கரவாதிகள் தான். ஒருபோதும் போரை தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அதற்கான நோக்கம் எப்போதும் இருந்தது இல்லை. அதேவேளையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை இப்போது வரை நாங்கள் நிறுத்தவில்லை.
கடந்த 78 ஆண்டுகளாக சர் க்ரீக் பகுதியில் எல்லை தொடர்பான பிரச்சனையை உருவாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. இதை பேசி தீர்க்க இந்தியா பல முறை முயற்சி செய்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு பிரச்சனையை முடிக்கும் எண்ணம் இல்லை. மாறாக சர்வதேச எல்லையான சர் க்ரீக் பக்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு வசதியை பலப்படுத்தி வருகிறது. தேவையின்றி ராணுவத்தையும் குவிக்கிறது.
இந்தியாவை ‛சர் க்ரீக்' பகுதி வழியாக பாகிஸ்தான் அச்சுறுத்தி பார்க்கிறது. உண்மையில் நாம் பலத்த பதிலடியை நாங்கள் கொடுப்போம். தொடர்ந்து நிலைமை கண்காணிக்கிறோம். அச்சுறுத்தல் வந்தால் அது வரலாற்றை மட்டும் அல்ல பாகிஸ்தானின் புவியல் அமைப்பையே மாற்றி விடும். 1965 போரில் லாகூர் வரை சென்று இந்தியா அடித்தது. இப்போது சர் க்ரீக் வழியாக கராச்சி வரை போக முடியும் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்'' என்று எச்சரிக்கை விடுத்ததார். இப்படியான சூழலில் தான் ‛சர் க்ரீக்' பகுதியில் நம் நாடு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் சுமார் 30,000 பேரை இறக்கி போர் பயிற்சி, ஆயுத பயிற்சி, போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளது. இதனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்!












Click it and Unblock the Notifications