அலகாபாத் அருகே இந்திய விமானப்படை விமானம் விபத்து: விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அலகாபாத் அருகே இந்திய விமானப்படை போர்விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக போர் விமானம் இன்று காலை 7.25 மணிக்கு வழக்கமான பயிற்சி பணியில் ஈடுபட்டது. காலை 8.47 மணிக்கு விமானம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகர் அருகே செல்கையில் விபத்துக்குள்ளானது.

Indian Air Force's Jaguar fighter aircraft crashes near Allahabad

விமானம் தரையில் விழப்போவதை உணர்ந்த 2 விமானிகள் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் எதனால் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது என்பது உடனே தெரியவில்லை.

Indian Air Force's Jaguar fighter aircraft crashes near Allahabad

இந்த ஆண்டில் விபத்துக்குள்ளான இரண்டாவது ஜாக்குவார் போர் விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா அருகே ஜாக்குவார் போர்விமானம் தொழில்நுட்பக் கோளாறால் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.

விமானப்படை விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+