For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்.. பதுங்கு குழிகள் மீது குண்டு மழை!

பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மீண்டும் ஒரு சர்ஜ்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழக்கும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

Indian Army demolishes Pakistan posts supporting infiltration in Nowshera

இந்நிலையில் நவ்காம் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.

காஷ்மீரின் ரஜோரி, நவ்ஷேரா பகுதிகளில் பீரங்கிகள் மூலம் இந்தியப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க பாகிஸ்தான் பதுங்குகுழிகள் மீது இந்திய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது.

இந்தத் தகவலை ராணுவ மேஜர் ஜெனரல் அசோக் நரூலா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார். மீண்டும் ஒரு சர்ஜ்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளதால் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

English summary
The India Army on Tuesday stated that counter-infiltration operations in Kashmir have been successful with damage caused to Pakistan posts. Maj Gen Ashok Narula, the spokesperson of the Army told reporters that Pakistan troops supporting infiltration have been given a befitting reply. During counterinsurgency operations at Nowshera, Pakistan posts have been destroyed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X