நாங்க ரெடி...நீங்க ரெடியா? இந்திய ராணுவ தலைமை தளபதி பாக்., சீனாவுக்கு சவால்!
பாகிஸ்தானாக இருந்தாலும் சீனாவாக இருந்தாலும் எதையும் சமாளிக்க நாங்கள் தயார் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவாத் கூறியிருக்கிறார்.
டெல்லி: அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க இந்திய ராணுவம் முழு அளவில் தயாராக உள்ளது என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், " உள்ளூர் அச்சுறுத்தல்களையும் நாட்டிற்கு வெளியில் இருந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. இந்தியா எதனையும் சமாளிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

பாகிஸ்தானுடன் போருக்கும், சீனாவுடன் போருக்கும் தயார். இந்த இரண்டு போரையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவும் முடியும். இந்த இரண்டு போர் நடக்கும் நேரத்தில் உள்நாட்டின் பாதுகாப்பையும், ராணுவத்தால் நிச்சயம் உறுதி செய்ய இயலும்.
இந்திய எல்லை மலைப்பகுதிகளில் போர் புரிய 17 புதிய படை பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்திய ராணுவத்திற்கு புதிதாக ஆள் சேர்ப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications