எல்லை தாண்டிய எருதுகள்.. நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைத்த இந்திய ராணுவம்

Subscribe to Oneindia Tamil

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் எல்லை தாண்டிய எருதுகளை நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைத்திருக்கிறது இந்திய ராணுவம்.

Recommended Video

    எல்லை தாண்டிய சீனாவின் எருதுகளை சீனாவிடம் ஒப்படைத்த இந்தியா

    லடாக் பிராந்தியத்தில் தொடங்கி அத்தனை எல்லைகளிலும் இந்தியாவுடன் மோதல் போக்கை மட்டுமே சீனா கடைபிடித்து வருகிறது. இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவி ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

    Indian Army returns 13 yaks to China in Arunachal Pradesh

    ஆனால் இந்திய ராணுவத்தினரோ எல்லை தாண்டி வரும் சீனர்கள், கால்நடைகளை நல்லெண்ண அடிப்படையில் அந்த நாட்டிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் வடக்கு சிக்கிமில் சீனர்கள் குழு ஒன்று 17,000 அடி உயர மலையில் வழிதெரியாமல் தவித்தது.

    அவர்களை மீட்டு முதலுதவி செய்து பாதுகாப்பாக சீனா எல்லைப் பகுதிக்கே திருப்பி அனுப்பி வைத்தனர் இந்திய ராணுவ வீரர்கள். இதேபோல் அருணாச்சல பிரதேசத்தில் எல்லை தாண்டிய சீனாவின் 13 காட்டு எருதுகள், கன்றுகளுடன் இந்தியாவுக்குள் வந்துவிட்டன.

    இந்த எருதுகளை பாதுகாப்பாக மீட்டு முறைப்படி சீனா ராணுவத்திடம் இந்திய வீரர்கள் நேற்று ஒப்படைத்தனர். ஆனால் சீனாவோ, அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 5 இந்தியர்களை கடத்திச் சென்றது. இது குறித்து இந்திய தரப்பில் கேட்டால், அருணாச்சல பிரதேசம் தெற்கு திபெத். அது எங்கள் பிரதேசம். எங்கள் நாட்டு குடிமகன்களை நாங்கள் ஏன் கடத்துகிறோம் என விதண்டாவாதம் பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+