காஷ்மீரில் நடக்கும் ஆபரேஷன் சிவா.. இந்திய ராணுவத்தின் அதிரடி திட்டம்.. வேலையை தொடங்கிய வீரர்கள்!
இந்திய ராணுவத்தின் சார்பாக காஷ்மீரில் தற்போது ஆபரேஷன் சிவா செயல்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஸ்ரீநகர்: இந்திய ராணுவத்தின் சார்பாக காஷ்மீரில் தற்போது ஆபரேஷன் சிவா செயல்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய உளவுத்துறைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் முக்கிய தகவல் ஒன்று வந்தது, அதன்படி, அமர்நாத் யாத்திரைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் மட்டுமில்லாமல், ராணுவ தாக்குதல் கூட நடக்கலாம். அதனால் இந்திய ராணுவம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால்தான் தற்போது அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

என்ன ஆபரேஷன்
அதன்படி காஷ்மீரை முழுக்க கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர தற்போது ஆபரேஷன் சிவா செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆபரேஷனை மூன்று கட்டங்களாக செய்ய இந்திய ராணுவம் முடிவெடுத்து உள்ளது. இதை குறைந்த வீரர்கள் கொண்டு செய்ய முடியாது என்பதால், கூடுதலாக வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

என்ன தொடக்கம்
காஷ்மீரில் நடக்க உள்ள எந்த விதமான தாக்குதலாக இருந்தாலும் அதை முறியடிக்க வேண்டும் என்பதுதான், இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும், அதன் முதற்கட்டமாக எல்லையில் அதிக வீரர்களை நிறுத்தி, ஊடுருவலை தடுக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டே கடந்த சில வாரங்களில் அங்கு வீரர்கள் களமிறக்கப்பட்டு, தற்போது 75 ஆயிரம் புதிய வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

அடுத்து என்ன
அடுத்தபடியாக காஷ்மீரில் ஏற்கனவே ஊடுருவி இருக்கும் விஷமிகளை, தீவிரவாதிகளை களை எடுக்க வேண்டும். ஆனால் இது அமர்நாத் யாத்திரையை பாதிக்கும். வெளிநாட்டு மக்கள் இந்த யாத்திரைக்காக வந்துள்ளனர். இதனால்தான் அமர்நாத் யாத்திரைக்கு வந்திருக்கும் மக்களை உடனே வெளியேற சொல்லி உள்ளனர்.

தேடுதல் வேட்டை
மக்கள் எல்லோரும் வெளியேறிய பின், அங்கு ஏற்கனவே ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அகற்றப்படுவார்கள். இது தொடர்பாக ஏற்கனவே இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் மூலம் 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்திய ராணுவத்தின் அதிரடி காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் அதிரடியாக சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

கடைசி
இதற்கு அடுத்தபடியாக காஷ்மீரில் புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணிவெடிகளை அகற்றிவிட்டு, மொத்தமாக ராணுவத்தை அனைத்து பள்ளத்தாக்கில் இறக்கி காஷ்மீரை முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள். இன்று மாலையில் இருந்து இதற்கான பணிகள் துவங்கும் என்கிறார்கள். காஷ்மீர் முழுக்க வீரர்கள் களமிறங்கி, மாநிலம் மொத்தத்தை கட்டுப்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications