மாட்டுக் கறி சாப்பிடுவோர் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு... இந்தியாவில்!
டெல்லி: இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்தியாஸ்பெண்ட் இணையதள செய்தி தெரிவிக்கிறது.
ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்தத் தகவல் தெரிவிக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டுக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
மாட்டுக் கறி மட்டுமல்லாமல் பிற வகை விலங்குகளைக் கொல்லவும் மகாராஷ்டிர அரசு தடை விதிப்பது குறித்து யோசித்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.

கிராமங்களில்தான் அதிகம்
2005 - 2012ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவின் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் மாட்டுக் கறி சாப்பிடுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது. அதாவது கிராமங்களில் 35 சதவீதமாகவும், நகரங்களில் 14 சதவீதமாகவும் இது இருந்தது.

சிக்கன்தான் பெஸ்ட்.. பர்ஸ்ட்
இருப்பினும் அசைவ உணவு சாப்பிடுவோர் மத்தியில் கோழிக் கறிக்குத்தான் முதல் சாய்ஸ் அதிகமாக உள்ளது. கோழிக்கறிதான் இந்தியாவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் அசைவ உணவாக நீடிக்கிறது.

2வது இடம் மீனுக்கு
கோழிக்கறிக்கு அடுத்த இடம் மீனுக்குக் கிடைத்துள்ளது. கோழிக்கறிக்கு அடுத்து இந்தியர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் அசைவ உணவு மீன்தானாம். இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஒரு மாதத்திற்கு 22 சதவீதம் அளவுக்கு மீன் சாப்பிடப்படுகிறது. இது கிராமப்புறங்களில் 32 சதவீதமாக உள்ளது.

கோழிக்கறிக்கு கிரேஸ் அதிகரிப்பு
இருப்பினும் 2004- 12ம் ஆண்டு காலத்தில் கோழிக்கறிக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. அதாவது நகர்ப்புறங்களில் 181 சதவீத அளவிலும், கிராமப்புறங்களில் 256 சதவீத அளவிலும் கோழிக்கறி சாப்பிடுவோர் எண்ணிக்கை உயர்ந்தது.

பாஜகவுக்கு பயமே இல்லையாம்
ஆனால் இந்த கறி உபயோக உயர்வால் பாஜக சலனமடைந்தது போலத் தெரியவில்லை. இத்தனைக்கும் தற்போது இந்தியாவில் 11 மாநிங்களில் பாஜகதான் ஆட்சி புரிந்து வருகிறது.

பசுவதையை அனுமதிக்க மாட்டோம்
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் பசுவதையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாட்டுக் கறியையும் அனுமதிக்க மாட்டோம். அதை முழுமையாக தடை செய்ய முயற்சி்போம் என்று கூறியிருந்தார்.

வருவாய் உயர்வே காரணம்
இந்தியாவில் கறி உபயோகம் அதிகரிக்கக் காரணம், வருவாய் உயர்வே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2005-06 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் தனி நபர் வருவாய் 55 சதவீதம் உயர்ந்துள்ளதாம்.

நமக்கு முன்னாடி சீனா, அமெரிக்கா
அதேசமயம் அசைவ உபயோகத்தில் நமக்கு ரொம்ப தூரத்திற்கு முன்னால் சீனாவும், அமெரி்க்காவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாம் 3வது இடத்தில்தான் இருக்கிறோம்.

மகாராஷ்டிராவில் கூவும் கோழி
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை கோழிக்கறிதான் அதிக அளவில் உண்ணப்படுகிறது. அடுத்த இடம் மீன் மற்றும் ஆட்டுக் கறிக்கு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications