லட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 29 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கவரட்டி: லட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 29 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தாலே எல்லை தாண்டிவிட்டனர் எனக் கூறி சிறையில் அடைக்கிறது இலங்கை அரசு. அதுவும் எல்லை தாண்டினால் தற்போது ரூ15 கோடி அபராதம் விதிப்போம் என மிரட்டிக் கொண்டிருக்கிறது அந்நாடு.

இந்நிலையில் இந்தியாவின் லட்சத்தீவு கடற்பகுதிக்குள் நுழைந்து ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் சிக்கியுள்ளனர். மொத்தம் 8 படகுகளில் இருந்த 29 இலங்கை மீனவர்களையும் இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.
அவர்களிடம் இருந்து மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications