கதற கதற ஆடைகளை களைந்து அந்தரங்க பகுதியில் சோதனை: தேவ்யானி கடிதம்
டெல்லி: அமெரிக்காவில் தாம் கதறி அழுத போதும் ஆடைகளைக் களைந்து அந்தரங்க பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டதாக தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து துணைத் தூதர் தேவ்யானி கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவ்யானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும், அத்துமீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவ்யானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விதிமுறை பின்பற்றப்படவில்லை..
அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. துணைத் தூதர் என்ற அடிப்படையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பல முறை எடுத்துக் கூறினேன்.

பல்வேறு சோதனைகள்..கை விலங்கு
ஆனால் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள்.

ஆடை களைந்து அந்தரங்கத்தில்..
என் ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அத்துடன் உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனை நடத்தினர். டி.என்.ஏ., சோதனைக்காக மாதிரிகளையும் என்னிடம் இருந்து எடுத்தனர்.

போதை கும்பலுடன்...
கிரிமினல் குற்றவாளிகளுடனும், போதை பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர்.

கதறியும் விடவில்லையே..
நான் மனம் உடைந்து பல முறை கதறி அழுதும் என்னை விடவில்லை. இப்போது நாடு எனக்கு ஆதரவாக இருப்பது புதிய பலத்தை தருகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications