நாடு முழுவதும் கனமழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்... இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்கள் மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வருகிறது.
ஏற்கனவே கர்நாடகா, கேராள ஆகிய மாநிலங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன.

கனமழைக்கு பலர் பலி
கேரளாவில் கடந்த ஒருமாதமாக பெய்யும் மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கனமழைக்கு ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.

பல மாநிலங்களில் கனமழை
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒடிசா மற்றும் தெற்கு சட்டீஸ்கரில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை
அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்குவங்கம், சிக்கிம், ஒடிசாவின் கடலோர பகுதிகள், உ.பி., அரியானா, சண்டிகர், டில்லி, பஞ்சாப், காஷ்மீர், கிழக்கு ராஜஸ்தான். குஜராத், கோவா, மத்திய மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கனமழை
தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மலையோர பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்க்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கர்நாடகாவில் கனமழை தொடரும்
இதேபோல் கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 81,038 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications