இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தில் பிளவு- ரியாஸ் பட்கல் தலைமையில் புதிய இயக்கம்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியன் முஜாதீன் தீவிரவாத இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் நிறுவனர்களில் ஒருவரான ரியாஸ் பட்கல் தனியாக செயல்படுவதாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை நிறுவியவர்கள் யாசின் பட்கல், ரியாஸ் பட்கல். இவர்களில் யாசின் பட்கல் நேபாள எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் சிக்கினான்.

தற்போது இந்த இயக்கமானது இரண்டாக பிளவுபட்டுள்ளது. ரியாஸ் பட்கல் தனியாக ஒரு சிறு இயக்கமாகவும் சுல்தான் அகமது அர்மர் தலைமையில் ஒரு இயக்கமாகவும் இயங்குகிறது.
இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தில் பிளவு ஏற்பட சொல்லப்படும் காரணங்கள்:
- ரியாஸ் பட்கல் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் அல்கொய்தா இயக்கத்துடன் இணைந்து செயல்பட தீர்மானித்திருக்கிறான்.
- ரியாஸின் இந்த முடிவை அர்மர் தலைமையிலான முஜாஹிதீன் இயக்க தீவிரவாதிகள் ஏற்கவில்லை.
- அர்மரைப் பொறுத்தவரையில் சிரியா- ஈராக்கில் யுத்தம் நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்படவே விருப்பம் தெரிவித்திருக்கிறான்.
- கடந்த மாதம் அர்மர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த கையோடு அந்த அமைப்புக்கான ஆட்சேர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டும் வருகிறான்.
- அர்மர், [email protected] என்ற ஐடி மூலமாக யாசின் பட்கலுடன் [email protected] இந்த முகவரியில் பல முறை சாட் செய்திருக்கிறான்
- இந்த உரையாடல்களிலேயே ரியாஸ் பட்கல், அல்கொய்தாவுடன் இணைய முடிவு செய்திருப்பது குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன.
- மேலும் ரியாஸ் [email protected] என்ற ஐடி மூலம் அர்மருடன் சாட் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
- இந்த சாட்டிங் தகவல்களின் அடிப்படையில்தான் இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் பிளவுபட்டிருப்பதையும் உளவுத்துறை உறுதி செய்திருக்கிறது.,
- அர்மர், தற்போது அன்சர் உத் தவ்ஹீத் என்ற இயக்கத்தின் பெயரில் செயல்பட்டு வருகிறான்.
- அத்துடன் தெக்ஹிரிக்- இ தலிபான் என்ற இயக்கத்தின் ஒரு பிரிவாகவும் அர்மர் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications