புத்தம் புது பூமி வேண்டும்.. பிரமாண்ட பூமியை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்! எவ்வளவு பெருசு
டெல்லி: ராஜஸ்தானில் உள்ள விண்வெளி மையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பிரமாண்ட கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இதில் ஏலியன்கள் இருக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது பூமியை விட பெரியதாகவும், ஏறத்தாழ சனி கிரகத்தின் சைஸில் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த கண்டுபிடிப்பு சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

நமது சூரிய குடும்பத்தில் பூமி இருப்பதை போல, பிரபஞ்சம் முழுவதும் உள்ள சூரியனை சுற்றி பூமி போன்ற கிரகங்கள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் நீண்ட காலமாக சொல்லி வந்தனர். தற்போது பூமி போன்ற கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு விண்வெளி ஆய்வு கூடத்திலிருந்து அலகாபாத் விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இக்கோளுக்கு TOI-6038A b என பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த கிரகம் PARAS -2 எனும் தொலை நோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்திய இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தால் (PRL) இந்த தொலைநோக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் வேலையே, சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் கோள்கைளை கண்டுபிடிப்பதுதான்.
விஞ்ஞானிகளின் கூற்றுபடி, நமது பூமி சூரியனை சுற்றுவதை போலவே, TOI-6038A b கிரகமும் F-வகை நட்சத்திரத்தை 5.83 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. அப்படியெனில் இந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியின் 5.83 நாட்களுக்கு சமமாகும். நமது சூரியனை விட பெரியதாகவும், அதிக வெளிச்சத்தை வெளிவிடும் நட்சத்திரத்தைதான் F-வகை நட்சத்திரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியுடன் இந்த கிரகத்தை ஒப்பிடும்போது, இது பூமியை விட 78.5 மடங்கு நிறை மற்றும் 6.41 மடங்கு எடையையும் கொண்டிருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு மூலம் இஸ்ரோவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது, கிரகங்கள் எப்படி உருவானது என்பதை இஸ்ரோவால் இதை ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும். ஆய்வின் முடிவுகள் சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை கூட ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் தலை நிமிர செய்ய வைக்க முடியும்.
அதேபோல, இதில் உயிர்கள் ஏதும் வாழ்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய முடியும். பொதுவாக இந்த வகை கோள்களில் அதிக அழுத்தம் இருக்கும். காரணம் அடர்த்தியான ஹைட்ரஜன்-ஹீலியமும் நிரம்பிய அடர்த்தியான வளிமண்டலம்தான். அதேபோல இந்த கிரகம் தனது சூரியனை வெறும் 5.83 நாட்களில் சுற்றி வருகிறது எனில், அது சூரியனுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். எனவே வெப்பமும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் ஓரளவுக்கு இருக்கதான் செய்கிறது. இது குறித்த ஆய்வு முடிவில்தான் உயிர்கள் இருக்கிறதா? இல்லையா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications