வேலை, சேமிப்பை விட்டுவிட்டு உடுத்திய உடையுடன் நேபாளத்தில் இருந்து வெளியேறும் இந்தியர்கள்
கோரக்பூர்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் வசித்து வரும் இந்தியர்கள் உடுத்திய ஆடையுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் 6 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அங்கு வசித்து வந்த இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் முதல் நாடாக இந்தியா தான் அங்கு மீட்பு பணியை மேற்கொள்ள விமானப்படை விமானங்கள், மருத்துவர்கள், மீட்பு குழுவினரை அனுப்பி வைத்தது.

இந்தியர்கள்
பல ஆண்டுகளாக நேபாளத்தில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களின் வேலை, உடைமைகள், சேமிப்பு ஆகியவற்றை விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று உடுத்திய உடையுடன் நாடு திரும்பி வருகின்றனர்.

நிலநடுக்கம்
நேபாளத்தில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த சுரேஷ் சாய்(41) தனது குடும்பத்தாருடன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூருக்கு வந்துவிட்டார். காத்மாண்டுவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் நான் பேருந்தில் ஏறும் வரை என் காலடியில் உள்ள நிலம் அதிர்ந்து கொண்டே இருந்தது என்றார்.

நகை பணம்
இடிந்து விழுந்த வீட்டுக்குள் நாங்கள் வைத்திருந்த பணம், நகைகளையாவது எடுத்து வரலாம் என்று நினைத்து முயன்றபோது முடியவில்லை. 20 ஆண்டு உழைப்பு போய்விட்டது. எனக்கு இங்கு வேலை இல்லை. அதனால் நான் நேபாளத்திற்கு திரும்பி செல்ல உள்ளேன் என்று சுரேஷ் தெரிவித்துள்ளார். சுரேஷ் போன்று பலரும் தங்களின் உடைமைகளை விட்டுவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.

முகாம்கள்
நேபாளத்தில் இருந்து வெளியேறி வரும் இந்தியர்களுக்காக எல்லையில் மற்றும் கோரக்பூர் போன்ற பெரிய நகரங்களில் மத்திய அரசு நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. நேபாளத்தில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் அந்த முகாம்களை அடைந்த பிறகு அவரவர் ஊர்களுக்கு செல்கின்றனர்.

மீட்பு
இந்த வாரம் மட்டும் 20 ஆயிரம் இந்தியர்கள் நேபாளத்தில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications