பாகிஸ்தான் பிரதமர் முதல், ராணுவ தளபதிகள் வரை.. முகமே தொங்கிப்போச்சு! பதற்றம் வேற.. போட்டோ பாருங்க
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இன்று தனது தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தை அழைத்தது. ஆனால், அதற்கு முன்பே பிரதமர் மோடி பீகாரில் இருந்து தனது நோக்கங்களைத் தெளிவுபடுத்திவிட்டார்.
பாகிஸ்தான் தனது ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தாங்கள் பயப்படவில்லை, பதற்றமடையவில்லை என்று காட்ட முயற்சித்தாலும், அவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளிவந்த படங்கள் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் முதல் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் ஆசிம் முனீர் வரை அனைவரின் முகங்களிலும் பயம் உள்ளதை காட்டுகின்றன.

அனைவரின் முகங்களிலும் பயம்
இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, 2019ம் ஆண்டு, பிப்ரவரி நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. பாலகோட் வான்வழித் தாக்குதல் பாகிஸ்தானை உலுக்கியது. பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயன்றது. அப்போது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்த F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையில், இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமானின் மிக்-21 போர் விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து நொறுங்கியது, அவர் பிடிபட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது. அபிநந்தன் விடுவிக்கப்படவில்லை என்றால் பாகிஸ்தான் தாக்கப்படும் என்று இந்தியா தெளிவாகத் தெரிவித்தது. இந்த நேரத்தில் பாகிஸ்தானில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம், பாகிஸ்தான் ஊடகமே வெளிப்படுத்தியது.
பாகிஸ்தான் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகளின் நிலை
2020-ல், பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்தியா தாக்கப் போவதாக அச்சுறுத்தியதால்தான் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானை விடுவிக்க வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) தலைவர் சர்தார் அயாஸ் சாதிக் பாராளுமன்றத்தில் பேசுகையில், அபிநந்தன் கைதுக்குப் பிறகு அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்கவில்லை என்றால், இந்தியா "அன்றிரவு 9 மணிக்கு" தாக்கும் என்று கூறினார். அந்த நேரத்தில் "ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வா மிகவும் வியர்த்து, அவருடைய கால்கள் நடுங்கின" என்று அந்த பாகிஸ்தான் எம்.பி. தெரிவித்தார்.
ஜெனரல் பாஜ்வா நடுங்கினார்
சர்தார் அயாஸ் சாதிக் பாராளுமன்றத்தில், "ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வா அறைக்குள் வந்தார், அவருடைய கால்கள் நடுங்கின, அவருக்கு வியர்த்தது. வெளியுறவுத் துறை அமைச்சர், கடவுளுக்காக அபிநந்தனைப் போக விடுங்கள், இந்தியா இரவு 9 மணிக்கு பாகிஸ்தானைத் தாக்கப் போகிறது என்று கூறினார்" என்றார். இப்படி பாகிஸ்தானின் பிரமுகர்களே தங்கள் ராணுவம் பயந்ததை தெரிவித்திருந்தனர். இப்போது வெளியாகியுள்ள படங்கள், அதை புடம் போட்டு காட்டிவிட்டன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications