டெல்லி ஏர்போர்ட்டில் தரையிறங்கும்போது தீ பிடித்த இன்டிகோ விமானம்: பயணிகள் காயம்
டெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இன்டிகோ விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 முதல் 9 பயணிகள் வரை காயம் அடைந்தனர்.

இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 147 பயணிகள், 6 சிப்பந்திகளுடன் இன்று மும்பையில் இருந்து டெல்லி கிளம்பியது. விமானம் இன்று மதியம் 3.35 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது முன் பக்கம் உள்ள டயர் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானத்தில் இருந்த பயணிகள் 75 வினாடிகளில் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது 8 முதல் 9 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு விமான நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு பயணிகள் அனைவரும் தங்களின் வீடுகளுக்கு கிளம்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications