வேட்புமனு வாபஸ் பெற சிறிது நேரம் இருந்தபோது.. இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவில் சேர்ப்பு!
இந்தூர்: காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பாம், கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு பாஜகவில் ஐக்கியமானார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. வரும் வாரங்களில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் ஐக்கியம்: இந்தூரில் காங்கிரஸ் சார்பில் அக்ஷய் பாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். அங்கே வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அக்ஷய் பாம் திடீரென பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அங்கு இன்றுடன் வேட்புமனுவை வாபஸ் பெற கால அவகாசம் முடிகிறது. இந்த கால அவகாசம் முடிய சில மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதன் மூலம் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியே இல்லாமல் பாஜக வேட்பாளர் எளிதாக எம்பியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தூர் தொகுதி: இந்தூர் தொகுதியில் இப்போது பாஜகவில் இருந்து ஷங்கர் லால்வானி எம்பியாக இருக்கிறார். அவருக்கு எதிராகத் தான் அக்ஷய் பாம் என்பவரைக் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருந்தது.. இருப்பினும், அவர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ள
காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி: உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்படியொரு நபருக்கு சீட் கொடுத்தது காங்கிரஸ் தலைமையின் தவறு என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள். இது தொடர்பாகக் காங்கிரஸின் தேவேந்திர சிங் கூறுகையில், "நான் கட்சித் தலைமைக்கு ஏற்கனவே அக்ஷய் பாம் பற்றி எச்சரித்திருந்தேன்.
அவர் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் தான் கேட்கவில்லை.. இப்போது நான் சொன்னது தான் நடந்துள்ளது.. எங்களைப் போன்ற கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு சீட் வழங்காமல் அக்ஷய் போன்ற நபர்களுக்கு சீட் வழங்குவது ஏன் என புரியவில்லை" என்று சாடினார்.
குஜராத் சம்பவம்: குஜராத் மாநிலம் சூரத் லோக்சபாவில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் வேட்பாளரை முன்மொழிந்து போடப்பட்ட கையெழுத்து போலி எனக் கூறி வேட்புமனுவை நிராகரித்திருந்தனர். இதே காரணத்தைக் கூறி அங்கு வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. இதன் காரணமாக அங்கு பாஜக வேட்பாளர் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய மற்றும் வட மாநிலங்கள் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவை. அங்கு காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதிகளில் யார் வெல்கிறார்கள் என்பது தேர்தலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே பாஜக எந்த எல்லைக்கும் போக ரெடியாகிறது என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications