தண்ணீர் குடித்தவுடன் அடுத்தடுத்து சரிந்த 22 பேர்.. இந்தூரில் மீண்டும் பயங்கரம்.. என்ன நடந்தது!
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் காற்று மாசு காரணமாகச் சுமார் 20 பேர் உயிரிழந்திருந்தனர். இதற்கிடையே மீண்டும் அதுபோன்ற ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அங்கு மாசடைந்த நீரைக் குடித்ததால் சுமார் 22 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குடித்ததில் பலருக்கும் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டது. மாசடைந்த நீரைக் குடித்ததில் நோய்ப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதில் 23 பேர் உயிரிழந்ததுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது அப்போது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஷாக் சம்பவம்
இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு மாசடைந்த குடிநீரைக் குடித்ததால் 22 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மாசடைந்த நீரைக் குடித்ததால் 23 பேர் உயிரிழந்திருந்தனர். இதற்கிடையே மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர சிகிச்சை
அங்கு மொத்தம் 22 பேர் அசுத்தமான குடிநீரைக் குடித்ததால் நோய்வாய்ப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. அதில் 9 பேர் உடல்நிலை மிக மோசமாக இருக்கும் சூழலில் அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வீடுகளிலேயே சிகிச்சை பெறுகின்றனர். மேலும் சிலருக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25ஐ தாண்டக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தத் தகவலைத் தொடர்ந்து நேற்றிரவு மாவட்ட நிர்வாகம் விரைந்து சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா, அங்கு நோயாளிகளைச் சந்தித்து ஆய்வு செய்தார். சுகாதாரக் குழுக்களும் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. பாதிப்புக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியச் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளைச் செய்வதோடு கண்காணிப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். நாளை முதல் புதிய நோயாளிகளைக் கண்டறிந்து, அறிகுறிகளின் தீவிரம் அடிப்படையில் அவர்களுக்குத் தக்க சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
மீண்டும் பயங்கரம்
முன்னதாக இந்த மாதத் தொடக்கத்தில் தான் இந்தூரில் மாசடைந்த நீரைக் குடித்ததால் சிலர் உயிரிழந்திருந்தனர். இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான நகரம் என பெயரெடுத்துள்ள இந்தூரில் இதுபோல நீர் மாசு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் அதிகாரப்பூர்வமாக 15 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டாலும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் சுமார் 25 பேர் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து விசாரிக்கவும், காரணத்தைக் கண்டறிந்து மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கவும் மாநில அரசும் தனியாக ஒரு குழுவை அமைத்திருந்தது. இருப்பினும், இந்தக் குழு அமைக்கப்பட்டு சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் நீர் மாசு காரணமாகப் பலரும் நோய்வாய்ப்பட்டு இருப்பது பேசுபொருளாகியுள்ளது.
என்ன காரணம்
குடிநீரில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றே பரவலான நோய்த் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. பகீரத்புராவின் 51 ஆழ்துளைக் கிணறுகளில் அசுத்தமான நீர் கண்டறியப்பட்டதுடன், ஈ-கோலி பாக்டீரியா இருப்பதைச் சோதனை அறிக்கைகள் உறுதிப்படுத்தின. இந்தத் தகவலை மாநில அரசு உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட 21 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் அங்கு மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications