ஒரு மகளை கொன்றுவிட்டு மற்றொரு மகளை கட்டிப்பிடித்து நீலிக்கண்ணீர் விட்ட இந்திராணி
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி மும்பை நீதிமன்றத்தில் தனது மற்றொரு மகளான விதியை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த வாரம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்திராணி தனது இரண்டாவது கணவரான சஞ்சீவ் கன்னாவின் உதவியுடன் ஷீனாவை கொலை செய்தார்.
இந்நிலையில் போலீசார் இந்திராணியை திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, சஞ்சீவ் உள்ளிட்டோரின் காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

விதி
இந்திராணிக்கும், சஞ்சீவ் கன்னாவுக்கும் பிறந்த மகளான விதி நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். தூரத்தில் இருந்து இந்திராணியை பார்க்க விதிக்கு அனுமதி அளிக்குமாறு அவரின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றார்.

சந்திப்பு
போலீசாரோ விதியும், இந்திராணியும் அருகில் அமர்ந்து பேசவே அனுமதி அளித்தனர். அப்போது இந்திராணி தனது மகளை கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.

மயக்கம்
முன்னதாக இந்திராணி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்தார். இந்திராணியை விசாரணையின்போது போலீசார் அடித்ததாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்திராணி
இந்திராணி தனது மகன் மிகைல் போராவையும் கொலை செய்ய 4 முறை முயற்சி செய்து தோல்வி அடைந்தார். இந்நிலையில் மகனை விஷம் வைத்துக் கொல்ல முயன்றதாக இந்திராணி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications