போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவ ஷீனாவின் உடலை காரில் உட்கார வைத்துச் சென்ற இந்திராணி
மும்பை: ஷீனாவின் உடலை காரின் பின்இருக்கையில் அமர வைத்து இந்திராணியும், சஞ்சீவ் கன்னாவும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் மும்பை போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து போலீசார் கூறுகையில்,
இந்திராணியும், சஞ்சீவும் ஷீனாவை கழுத்தை நெறித்துக் கொன்று அவரின் உடலை காரில் ஏற்றி மும்பை வோர்லியில் உள்ள இந்திராணியின் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஷீனாவின் உடலை காரின் பின்பக்கத்தில் அமர வைத்துள்ளனர். கராஜில் காரில் இருந்த ஷீனாவின் உடலுக்கு டிரைவர் பாதுகாப்பாக இருந்துள்ளார்.
மறுநாள் காலை 5 மணிக்கு இந்திரானி, கன்னா ஆகியோர் ரைகாட் கிளம்பியுள்ளார். காரை ராய் ஓட்டியுள்ளார். வழியில் போலீஸ் சோதனைச்சாவடியில் சிக்காமல் இருக்க ஷீனாவின் உடலை காரின் பின் இருக்கையில் உயிருள்ளவர் அமர்ந்திருப்பது போன்று அமர வைத்து இருபக்கமும் இந்திராணியும், கன்னாவும் அமர்ந்து சென்றுள்ளனர்.
அப்படியே போலீசார் காரை நிறுத்தி கேட்டாலும் ஷீனா தூங்குவதாக கூறிவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார் இந்திராணி. ரைகாடை அடைந்த பிறகு ஷீனாவின் உடலை சூட்கேஸில் அடைக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து அவரின் உடலை எரித்துள்ளனர். ஷீனாவை கொலை செய்த கையோடு மிகைல் போராவை கொலை செய்ய திட்டமிட்டார் இந்திராணி. ஆனால் மிகைல் இந்திராணியின் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications