நான் தான் உன் அம்மா என யாரிடமும் கூறாதே: மகனுக்கு பணம் அளித்து வந்த இந்திராணி
மும்பை: இந்திராணி முகர்ஜி தான் தான் அம்மா என்று யாரிடமும் கூறாமல் இருக்க மிகைல் போராவுக்கு பணம் அளித்து வந்துள்ளார்.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொலை செய்தார். சம்பவம் நடந்த அன்று இந்திராணி அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் வசித்து வந்த தனது மகன் மிகைல் போராவை மும்பைக்கு வரவழைத்து தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

ஷீனாவை கொலை செய்யும் முன்பு மிகைலுக்கு குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளார் இந்திராணி. அதை குடித்த பிறகும் மிகைல் ஒருவழியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
ஷீனா கவுஹாத்தியில் இருந்து மும்பை வந்த பிறகும் மிகைலுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்த அன்று அவர்கள் இருவரும் தொடர்பு கொள்ளாமல் இருக்கும்படி இந்திராணி பார்த்துக் கொண்டுள்ளார். சொத்து விவகாரம் பற்றி பேச வேண்டும் என்று கூறி மிகைலை மும்பைக்கு வரவழைத்துள்ளார் இந்திராணி.
ஷீனாவின் கொலை விவரம் வெளியே தெரிய வந்ததும் நான் தான் உன் அம்மா என்று யாரிடமும் தெரிவிக்காதே என்று கூறி மிகைலுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார் இந்திராணி. இந்த தகவலை மிகைலே தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திராணியுடனான பிரச்சனை குறித்து ஷீனா தனக்கு அனுப்பிய இமெயில் விவரங்களை மிகைல் போலீசாரிடம் பகிர்ந்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications