பாகிஸ்தான் இனி எப்படி கதறினாலும் சிந்து நதி நீர் கிடையாது.. காஷ்மீரில் ஜரூராக பணி.. மாஸ்டர் ஸ்கெட்ச்
ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சிந்து நதி நீர் கிடைக்காமல் பாகிஸ்தான் அவதிப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வரும் நாட்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என்பதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரில் வேலையை ஜரூராக தொடங்கி உள்ளது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவிகளை கொன்றனர். இந்த சம்பவம் நம் நாட்டை உலுக்கியது. இதையடுத்து நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நம் நாடு விடுவிக்க மறுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு சிந்து நீதி நீர் கிடைக்கவில்லை. சிந்து நதிநீரை கேட்டு பாகிஸ்தான் நம் நாட்டிடம் கெஞ்சி வருகிறார். ஆனால் மத்திய அரசு சார்பில் ஒப்பந்தத்தை நிறுத்தியது நிறுத்தியது தான். இனி அதில் மாற்றம் செய்ய முடியாது என உறுதியாக கூறிவிட்டது.
மத்திய அரசின் புதிய நடவடிக்கை
மேலும் சிந்து நதி நீரை நம் நாட்டின் பிற இடங்களுக்கு திரும்பி நம் நாட்டை செழிப்பாக்கவும், நீர் மின் திட்டங்களுக்கு பயன்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட செல்ல விடாமல் மத்திய அரசு இன்னொரு நடவடிக்கையை எடுக்க உள்ளது.
அதன்படி ஜம்மு காஷ்மீரில் கூடுதலாக நீர் மின்சக்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கூடுதலாக 2 நீர்மின்சக்தி திட்டத்தை அங்கீகரிக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்கப்பணிகள் நடந்துள்ளது. முதற்கட்டமாக நீர்மின் திட்டங்களுக்கான டிசைன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
4 பணிகள் தீவிரம்
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு தண்ணீர் ஆதாரமாக உள்ள செனாப் நதியில் 4 நீர் மின் திட்டங்களை நம் நாடு கட்டமைத்து வருகிறது. அந்த பணிகளை இன்னும் விரைவுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது செனாப் நதியில் பகல் துலில் 1000 மெகாவாட் நீர்மின் திட்டம், கிருவில் 624 மெகாவாட், குவார் நகரில் 540 மெகாவாட் மற்றும் ராட்லேவில் 850 மெகாவாட் நீர்மின் திட்டம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்ட பணிகளை தேசிய நீர்மின்சாரக் கழகம் லிமிடெட் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில மின் மேம்பாட்டுக் கழகங்கள் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்கள் 2026ம் ஆண்டு மே மாதம் முதல் 2028 ஜூலை மாதத்துக்குள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த திட்டங்களையும் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சிந்து நதி நீர் பங்கீட்டின் மூலமாக செனாப் நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது தடுக்கப்படும். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் செனாப் நதியில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உருவாகும்.
புதிய அணை
அதேபோல் காஷ்மீரில் செனாப் நதியின் துணை நதியான மருசுதர் ஆற்றில் புதிதாக அணை கட்டப்பட்டு வருகிறது. பகல் துல் என அழைக்கப்படும் இந்த அணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அணையின் முக்கிய நோக்கம் மரசுதர் ஆற்றின் தண்ணீரை 10 கிமீ (6.2 மைல்) நீளமுள்ள ஹெட்ரேஸ் சுரங்கப்பாதை வழியாக செனாப்பில் உள்ள துல் ஹஸ்தி அணைக்கு கொண்டு செல்வதாகும்.
இந்த பணியையும் விரைவுப்படுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்காது என அந்த நாடு தொடர்ந்து கதறி வருகிறது. இப்படியான சூழலில் தான் இந்த அணையை கட்டும் பணியை நம் நாடு விரைவுப்படுத்தி உள்ளது.
சிந்து நதி ஒப்பந்தம் என்பது என்ன?
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1960ம் ஆண்டில் உலக வங்கி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தப்படி சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) தண்ணீரும் ஒதுக்கப்பட்டன.
இதன்மூலம் சிந்து நதி நீரால் பாகிஸ்தானில் விவசாயம் செழித்தது. மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியானதோடு, நீரில் இருந்து மின் உற்பத்தியும் தயாரிக்கப்பட்டது. தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகை 24 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 22 கோடி பேர் சிந்து நதி நீரை நம்பி இருந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் மெல்ல பாதிக்க தொடங்கி உள்ளது. இப்படியான சூழலில் தான் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் செனாப் நதியின் குறுக்கே நம் நாடு நீர்மின் திட்டங்களை வேகப்படுத்த தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியா-வில் செய்த வேலை.. முதல் ராணுவ ஆக்ஷன்! -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
ஈரானுக்கு திரும்ப கிடைக்க போகும் மிகப்பெரிய சொத்துக்கள்.. அமெரிக்கா சம்மதித்தது ஏன்? -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
வளைகுடாவில் மூக்கை நுழைக்கும் ஷெரீப்.. சவுதி பாகிஸ்தான் டீல் என்ன! உலக போர் வெடிக்கும் ஆபத்து -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
நடுவில் பாகிஸ்தானை வைத்து.. ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா! அடுத்து என்ன நடக்கும்? -
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள்












Click it and Unblock the Notifications